• Oct 27 2024

மாற்றுத்திறனாளிகள் மீது அரசு அக்கறை செலுத்துவதில்லை - ரங்கடம்பநாதன் தெரிவிப்பு..!!

Tamil nila / Apr 7th 2024, 6:35 pm
image

Advertisement

எத்தனையோ மாற்றுத்திறனாளிகள் சங்கம் இயங்கினாலும் அரசினுடைய பார்வை மாற்றுத்திறனாளிகளிடத்தில்  அரிதாக காணப்படுவது மிகவும் வேதனைக்குரிய விடயமாக உள்ளதாக பார்வையற்றோர் அறக்கட்டளை நிலையத்தின் பொருளாளர் அப்புத்துரை ரங்கடம்பநாதன் தெரிவித்துள்ளார். 

இன்று யாழில் இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

சாதாரணமான விளையாட்டு கழகங்கள், சனசமூக நிலையங்கள், ஆலயங்கள், பாடசாலைகள் எல்லாவற்றுக்கும் வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுகின்றன. ஆனால் இரண்டு தடவை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இந்த விடயத்தை முன்வைத்தும் மாற்றுத்திறனாளிகள் குறித்து  இன்னமும் கவனத்தில் எடுக்கப்படவில்லை. 

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கு அறிக்கையில்  சேர்ப்பார்கள் என்று நாம் நம்பியிருந்தோம். வாக்குறுதிக்கு மாறாக  எங்களுக்கு சாதகமான பதில் இதுவ்ரை கிடைக்கவில்லை. மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்கள் இதுவரை திறைசேரி அமைப்புக்களில் இருந்தோ அரசு நிதியில் இருந்தோ மாற்றுத்திறனாளிகளை  வளப்படுத்தி வருவதில்லை. 

இந்த இடங்களில் மக்கள் தனவந்தர்களிடம் சென்று நிர்வாக சபையினர் தங்களினுடைய வேண்டுகோள்களை விடுத்துத்தான் மாற்றுத்திறனாளிகளின் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்ற வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. 

எல்லோரும்  நாட்டுக்கு வரியை கட்டுகின்றோம். சலுகைகளை செய்கின்றோம். பொருளாதாரங்களுக்கு மாற்று திறனாளிகளுக்கு ஈடுபாடாகத்தான் இருக்கின்றார்கள். ஆனால் இந்த விடயத்தில் எங்களை    புறம்போக்காகத்தான் கணிக்கப்போகின்றார்கள். 

இந்த நிலை மாறவேண்டும் என்று நாம் கருதுகின்றோம். போக்குவரத்து விடயத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு   வழங்கப்பட்ட ஆசனங்கள் சீராக வழங்கப்படுவதில்லை. அதனை சென்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் முன்வைத்திருக்கின்றோம். முக்கியமான விடயமாக பேருந்துக்குள் காலையில் ஓடும் போது துப்பரவாக்கப்படுவதில்லை. அலுவலகங்களுக்கு செல்லும்போது அது சுத்தமற்ற நிலையில் காணப்படுகின்றது. ஆனால்  இதற்கான நிதி ஒதுக்கப்படுகிறது அவர்கள் இதனை பயன்படுத்துவது இல்லை. 

அரச நிலை அலுவலகங்கள், அரசார்பற்ற அலுவலகங்களில் எல்லாம் மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. பேரளவில் தான் கூறப்பட்டு வருகின்றன. சமூக சேவை திணைக்களங்கள், சமூக சேவை அலுவலகங்கள் எல்லாவற்றிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு மட்டும் தான் வழங்கப்பட்டு வருகின்றன. ஏனைய வசதிப்படுத்தல்கள் ஒடுக்கப்பட்டு தான் கொடுக்கப்படுகின்றன. நிறைவாக கொடுக்கப்படுவதில்லை. இவற்றை எல்லாம் அரச திணைக்களங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். 

மாற்றுத்திறனாளிகளின் பொது அமைப்புக்கள் சமூக சேவை திணைக்களங்கள் அல்லது பிரதேச சேவை திணைக்களங்களின் கீழ் பதியப்பட்டும் உத்தியோகத்தர்கள்  அந்த மாற்று திறனாளிகள் அலுவலகங்களுக்கு வருகை தருவதில்லை. அது எவ்வாறு நடைபெறுவது என்று பார்ப்பதில்லை. இவ்வாறான கசப்பான அனுபவங்கள், கசப்பான நிதிமூல செயல்பாடுகள் எல்லாம் இருக்கின்றன. 

அண்மைக்காலத்தில் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் வடமாகாண ஆளுநர் மாற்றுத்திறனாளிகளுக்கான கொள்கை வரைவு ஒன்றை வரைவதாக கூறி எம்மை அழைத்திருந்தார். அந்த கொள்கை வரைவு வெளிப்படுத்தப்படாத காரணத்தையும் நாங்கள் அறிய விரும்புகின்றோம். குறித்த விடயம் தொடர்பில் பலதடவை கேட்டிருந்தும் அதற்கான வெளிப்படுதலை காணவில்லை. என அவர் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் மீது அரசு அக்கறை செலுத்துவதில்லை - ரங்கடம்பநாதன் தெரிவிப்பு. எத்தனையோ மாற்றுத்திறனாளிகள் சங்கம் இயங்கினாலும் அரசினுடைய பார்வை மாற்றுத்திறனாளிகளிடத்தில்  அரிதாக காணப்படுவது மிகவும் வேதனைக்குரிய விடயமாக உள்ளதாக பார்வையற்றோர் அறக்கட்டளை நிலையத்தின் பொருளாளர் அப்புத்துரை ரங்கடம்பநாதன் தெரிவித்துள்ளார். இன்று யாழில் இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சாதாரணமான விளையாட்டு கழகங்கள், சனசமூக நிலையங்கள், ஆலயங்கள், பாடசாலைகள் எல்லாவற்றுக்கும் வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுகின்றன. ஆனால் இரண்டு தடவை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இந்த விடயத்தை முன்வைத்தும் மாற்றுத்திறனாளிகள் குறித்து  இன்னமும் கவனத்தில் எடுக்கப்படவில்லை. பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கு அறிக்கையில்  சேர்ப்பார்கள் என்று நாம் நம்பியிருந்தோம். வாக்குறுதிக்கு மாறாக  எங்களுக்கு சாதகமான பதில் இதுவ்ரை கிடைக்கவில்லை. மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்கள் இதுவரை திறைசேரி அமைப்புக்களில் இருந்தோ அரசு நிதியில் இருந்தோ மாற்றுத்திறனாளிகளை  வளப்படுத்தி வருவதில்லை. இந்த இடங்களில் மக்கள் தனவந்தர்களிடம் சென்று நிர்வாக சபையினர் தங்களினுடைய வேண்டுகோள்களை விடுத்துத்தான் மாற்றுத்திறனாளிகளின் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்ற வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. எல்லோரும்  நாட்டுக்கு வரியை கட்டுகின்றோம். சலுகைகளை செய்கின்றோம். பொருளாதாரங்களுக்கு மாற்று திறனாளிகளுக்கு ஈடுபாடாகத்தான் இருக்கின்றார்கள். ஆனால் இந்த விடயத்தில் எங்களை    புறம்போக்காகத்தான் கணிக்கப்போகின்றார்கள். இந்த நிலை மாறவேண்டும் என்று நாம் கருதுகின்றோம். போக்குவரத்து விடயத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு   வழங்கப்பட்ட ஆசனங்கள் சீராக வழங்கப்படுவதில்லை. அதனை சென்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் முன்வைத்திருக்கின்றோம். முக்கியமான விடயமாக பேருந்துக்குள் காலையில் ஓடும் போது துப்பரவாக்கப்படுவதில்லை. அலுவலகங்களுக்கு செல்லும்போது அது சுத்தமற்ற நிலையில் காணப்படுகின்றது. ஆனால்  இதற்கான நிதி ஒதுக்கப்படுகிறது அவர்கள் இதனை பயன்படுத்துவது இல்லை. அரச நிலை அலுவலகங்கள், அரசார்பற்ற அலுவலகங்களில் எல்லாம் மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. பேரளவில் தான் கூறப்பட்டு வருகின்றன. சமூக சேவை திணைக்களங்கள், சமூக சேவை அலுவலகங்கள் எல்லாவற்றிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு மட்டும் தான் வழங்கப்பட்டு வருகின்றன. ஏனைய வசதிப்படுத்தல்கள் ஒடுக்கப்பட்டு தான் கொடுக்கப்படுகின்றன. நிறைவாக கொடுக்கப்படுவதில்லை. இவற்றை எல்லாம் அரச திணைக்களங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் பொது அமைப்புக்கள் சமூக சேவை திணைக்களங்கள் அல்லது பிரதேச சேவை திணைக்களங்களின் கீழ் பதியப்பட்டும் உத்தியோகத்தர்கள்  அந்த மாற்று திறனாளிகள் அலுவலகங்களுக்கு வருகை தருவதில்லை. அது எவ்வாறு நடைபெறுவது என்று பார்ப்பதில்லை. இவ்வாறான கசப்பான அனுபவங்கள், கசப்பான நிதிமூல செயல்பாடுகள் எல்லாம் இருக்கின்றன. அண்மைக்காலத்தில் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் வடமாகாண ஆளுநர் மாற்றுத்திறனாளிகளுக்கான கொள்கை வரைவு ஒன்றை வரைவதாக கூறி எம்மை அழைத்திருந்தார். அந்த கொள்கை வரைவு வெளிப்படுத்தப்படாத காரணத்தையும் நாங்கள் அறிய விரும்புகின்றோம். குறித்த விடயம் தொடர்பில் பலதடவை கேட்டிருந்தும் அதற்கான வெளிப்படுதலை காணவில்லை. என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement