• May 20 2024

தேர்தல்களை பிற்போட மந்திரம் ஓதும் அரசாங்கம் - ஹர்ஷன ராஜகருணா எச்சரிக்கை...!samugammedia

Anaath / Oct 12th 2023, 3:57 pm
image

Advertisement

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட வேண்டியிருந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தால் கால வரையரையின்றி ஒத்திவைக்கப்பட்ட செயல்பாடு  சகல விதங்களிலும் ஜனநாயகத்தை மீறிய செயல்பாடு என பாராளுமன்ற உறுப்பினரும் இன்று ஐக்கிய மக்கள்  சக்தி கட்சி உ றுப்பினருமான   ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். 

இன்று எதிர்க்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நடக்க வேண்டிய மாகாண சபை தேர்தலையும் நான்கு வருடங்களாக பிற்போட்டுள்ளனர். அவ்வாறே பாராளுமன்றத் தேர்தலையும்,ஜனாதிபதி தேர்தலையும் கூட்டு சதிகள் மூலம் ஒத்திவைக்க மந்திரம் ஓதி வருகின்றனர்.

மக்களால் வேண்டாம் என்று விரட்டியடிக்கப்பட்டவர்களை எவ்வாறு வீட்டுக்கு அனுப்புவது என்பதையே இன்னும் மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.அமைச்சரவை பத்திரத்தையும் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ளார்.

மக்கள் எதிர்ப்பை அடக்க பல்வேறு சட்ட மூலங்களை கொண்டு வருகின்றனர்.ஒரு புறம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்றும் மறுபுறம் நிகழ் நிலை காப்பு என்ற சட்டத்தை மறுபுறமாகவும் கொண்டு வர முயற்சிக்கின்றனர்.மக்கள் கருத்துக்கு இடமளிக்காது ஆட்சியில் தொடர்ந்தும் நீடிக்கவே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களை ஒடுக்கும் எந்த நடவடிக்கைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இடமளிக்காது என ரணில் ராஜபக்ச அரசாங்கத்திற்கு கூறுகிறோம்.

அரசாங்கத்தின் மக்கள் விரோத சட்ட மூலங்களை எதிர்த்து நாம் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்,பாராளுமன்றத்தில் எதிராக குரல் எழுப்பி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்,அவ்வாறே பாராளுமன்றத்திற்கு வெளியே சகலரையும் இணைத்துக் கொண்டு இதற்கு எதிராக செயற்படுவோம்.அதற்கான தலைமைத்துவத்தை ஐக்கிய மக்கள் சக்தி வழங்கும். என தெரிவித்துள்ளார். 

மேலும் நாட்டில் பாதல உலக நடவடிக்கை அதிகரித்துள்ளன.பாதாள  கொலைகள் அதிகமாக நடந்து வரும் நிலையில் நாட்டிற்கு பொலிஸ் மா அதிபர் ஒருவர் கூட இல்லை. பொலிஸ் மா அதிபர் பதவி காலம் முடிவடைந்துள்ளது.பொலிஸ் துறையின் நடவடிக்கைகளை கூட திறனாக முன்னெடுக்க முடியாதுள்ளது. எனவும் தெரிவித்துள்ளதுடன் சுகாதார துறையில் நிலவி வரும் பிரச்சினைகள் மொடர்பாகவும்  தொடர்ந்தும் கருத்துரைத்தார்.

தேர்தல்களை பிற்போட மந்திரம் ஓதும் அரசாங்கம் - ஹர்ஷன ராஜகருணா எச்சரிக்கை.samugammedia அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட வேண்டியிருந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தால் கால வரையரையின்றி ஒத்திவைக்கப்பட்ட செயல்பாடு  சகல விதங்களிலும் ஜனநாயகத்தை மீறிய செயல்பாடு என பாராளுமன்ற உறுப்பினரும் இன்று ஐக்கிய மக்கள்  சக்தி கட்சி உ றுப்பினருமான   ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். இன்று எதிர்க்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நடக்க வேண்டிய மாகாண சபை தேர்தலையும் நான்கு வருடங்களாக பிற்போட்டுள்ளனர். அவ்வாறே பாராளுமன்றத் தேர்தலையும்,ஜனாதிபதி தேர்தலையும் கூட்டு சதிகள் மூலம் ஒத்திவைக்க மந்திரம் ஓதி வருகின்றனர்.மக்களால் வேண்டாம் என்று விரட்டியடிக்கப்பட்டவர்களை எவ்வாறு வீட்டுக்கு அனுப்புவது என்பதையே இன்னும் மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.அமைச்சரவை பத்திரத்தையும் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ளார்.மக்கள் எதிர்ப்பை அடக்க பல்வேறு சட்ட மூலங்களை கொண்டு வருகின்றனர்.ஒரு புறம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்றும் மறுபுறம் நிகழ் நிலை காப்பு என்ற சட்டத்தை மறுபுறமாகவும் கொண்டு வர முயற்சிக்கின்றனர்.மக்கள் கருத்துக்கு இடமளிக்காது ஆட்சியில் தொடர்ந்தும் நீடிக்கவே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.மக்களை ஒடுக்கும் எந்த நடவடிக்கைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இடமளிக்காது என ரணில் ராஜபக்ச அரசாங்கத்திற்கு கூறுகிறோம்.அரசாங்கத்தின் மக்கள் விரோத சட்ட மூலங்களை எதிர்த்து நாம் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்,பாராளுமன்றத்தில் எதிராக குரல் எழுப்பி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்,அவ்வாறே பாராளுமன்றத்திற்கு வெளியே சகலரையும் இணைத்துக் கொண்டு இதற்கு எதிராக செயற்படுவோம்.அதற்கான தலைமைத்துவத்தை ஐக்கிய மக்கள் சக்தி வழங்கும். என தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் பாதல உலக நடவடிக்கை அதிகரித்துள்ளன.பாதாள  கொலைகள் அதிகமாக நடந்து வரும் நிலையில் நாட்டிற்கு பொலிஸ் மா அதிபர் ஒருவர் கூட இல்லை. பொலிஸ் மா அதிபர் பதவி காலம் முடிவடைந்துள்ளது.பொலிஸ் துறையின் நடவடிக்கைகளை கூட திறனாக முன்னெடுக்க முடியாதுள்ளது. எனவும் தெரிவித்துள்ளதுடன் சுகாதார துறையில் நிலவி வரும் பிரச்சினைகள் மொடர்பாகவும்  தொடர்ந்தும் கருத்துரைத்தார்.

Advertisement

Advertisement

Advertisement