• May 01 2024

கோட்டாவுக்காக மாதாந்தம் பெருந்தொகை பணத்தை செலவிடும் அரசு - அமைச்சர் தகவல்!

Chithra / Jan 17th 2023, 7:29 pm
image

Advertisement

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அரசாங்கத்தினால் 19 வாகனங்களும், உணவு, பானங்கள் உள்ளிட்ட செலவுகளுக்காக மாதாந்தம் 950,000 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்திற்கு ஊடகவியலாளர் ஒருவர் விடுத்த எழுத்துமூல கோரிக்கைக்கு அமைய இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளதாக இன்று (17) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தைக் கூட வழங்க முடியாத சூழ்நிலையில் இவ்வாறான செலவை மேற்கொள்வது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 

நாட்டின் ஒட்டுமொத்த செலவீனங்களைப் பார்க்கும் போது இது ஒரு சிறிய செலவு மட்டுமே என்றார்.

1977ம் ஆண்டு முதல் அரசாங்கத்தின் செலவு வருமானத்தை விட அதிகமாக உள்ளது, அன்றாட செலவுகளுக்கு போதிய வருமானம் இல்லாத நாடாக நாம் வந்துள்ளோம்.

இந்த சிறிய செலவுகளைப் பார்க்கும் முன், பெரிய அளவிலான செலவுகளைப் பார்க்க வேண்டும். அதாவது அரசு ஊழியர் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கடன் வட்டி செலுத்துதல். இந்த பெரிய அளவிலான திட்டங்களில் எதையும் குறைக்க முடியாது.

தற்போது, ​​நாட்டின் அமைச்சர்கள் கூட அதிக அளவில் நன்கொடை அளித்துள்ளனர். நான் இப்போது நான்கு அமைச்சுக்களின் பாரத்தை தனியாளாக சுமந்து வருகிறேன். இதனால் எஞ்சும் தொகையை பாருங்கள் என்றார்.

கோட்டாவுக்காக மாதாந்தம் பெருந்தொகை பணத்தை செலவிடும் அரசு - அமைச்சர் தகவல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அரசாங்கத்தினால் 19 வாகனங்களும், உணவு, பானங்கள் உள்ளிட்ட செலவுகளுக்காக மாதாந்தம் 950,000 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஜனாதிபதி செயலகத்திற்கு ஊடகவியலாளர் ஒருவர் விடுத்த எழுத்துமூல கோரிக்கைக்கு அமைய இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளதாக இன்று (17) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தைக் கூட வழங்க முடியாத சூழ்நிலையில் இவ்வாறான செலவை மேற்கொள்வது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நாட்டின் ஒட்டுமொத்த செலவீனங்களைப் பார்க்கும் போது இது ஒரு சிறிய செலவு மட்டுமே என்றார்.1977ம் ஆண்டு முதல் அரசாங்கத்தின் செலவு வருமானத்தை விட அதிகமாக உள்ளது, அன்றாட செலவுகளுக்கு போதிய வருமானம் இல்லாத நாடாக நாம் வந்துள்ளோம்.இந்த சிறிய செலவுகளைப் பார்க்கும் முன், பெரிய அளவிலான செலவுகளைப் பார்க்க வேண்டும். அதாவது அரசு ஊழியர் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கடன் வட்டி செலுத்துதல். இந்த பெரிய அளவிலான திட்டங்களில் எதையும் குறைக்க முடியாது.தற்போது, ​​நாட்டின் அமைச்சர்கள் கூட அதிக அளவில் நன்கொடை அளித்துள்ளனர். நான் இப்போது நான்கு அமைச்சுக்களின் பாரத்தை தனியாளாக சுமந்து வருகிறேன். இதனால் எஞ்சும் தொகையை பாருங்கள் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement