• Feb 09 2025

இழப்பீடு பெற்றுக்கொண்ட அமைச்சர்களை திருடர்கள் என கூற அரசு முயற்சி - குற்றம்சாட்டும் மொட்டு கட்சி

Chithra / Feb 8th 2025, 5:45 pm
image


இழப்பீடு பெற்றுக் கொண்ட அமைச்சர்களின் விபரங்களை வெளியிட்டு  இவர்கள் அனைவரும் திருடர்கள் எனத் தேசிய மக்கள் சக்தி கட்சி கூற முயல்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் தெரிவித்துள்ளார். 

ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். 

கடந்த வாரம் ஒரு நாடகமும், இந்த வாரம் ஒரு நாடகமும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அரங்கேற்றுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 

அமைச்சர்களின் சொத்துக்களுக்கு, வீடுகளுக்குக் கிடைத்த நட்டஈட்டை வெளியிட்டு  இவர்கள் அனைவரும் திருடர்கள் எனக் கூற முயல்கிறார்கள். 

நளிந்த ஜயதிஸ்ஸ தோற்றுப்போன அரசின் தோற்றுப்போன செயற்பாடுகளை மறைப்பதற்கு இதுமாதிரியான விடயங்களைக் கூறி வருகின்றார். 

அடுத்து ஒரு தேர்தல் வருகின்றது.  இந்த தேர்தல்களுக்குத் தான் அடுத்த முன்னெடுப்புகளை மேடையேற்றுகின்றனர்.  என்று கூறினார்.

இழப்பீடு பெற்றுக்கொண்ட அமைச்சர்களை திருடர்கள் என கூற அரசு முயற்சி - குற்றம்சாட்டும் மொட்டு கட்சி இழப்பீடு பெற்றுக் கொண்ட அமைச்சர்களின் விபரங்களை வெளியிட்டு  இவர்கள் அனைவரும் திருடர்கள் எனத் தேசிய மக்கள் சக்தி கட்சி கூற முயல்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். கடந்த வாரம் ஒரு நாடகமும், இந்த வாரம் ஒரு நாடகமும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அரங்கேற்றுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அமைச்சர்களின் சொத்துக்களுக்கு, வீடுகளுக்குக் கிடைத்த நட்டஈட்டை வெளியிட்டு  இவர்கள் அனைவரும் திருடர்கள் எனக் கூற முயல்கிறார்கள். நளிந்த ஜயதிஸ்ஸ தோற்றுப்போன அரசின் தோற்றுப்போன செயற்பாடுகளை மறைப்பதற்கு இதுமாதிரியான விடயங்களைக் கூறி வருகின்றார். அடுத்து ஒரு தேர்தல் வருகின்றது.  இந்த தேர்தல்களுக்குத் தான் அடுத்த முன்னெடுப்புகளை மேடையேற்றுகின்றனர்.  என்று கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement