• Feb 15 2025

வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி யாழில் இன்றும் பட்டதாரிகள் போராட்டம்

Chithra / Feb 14th 2025, 1:21 pm
image


வேலை வாய்ப்பினை வழங்குமாறு கோரி வேலையில்லா பட்டதாரிகள் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பட்டதாரிகள் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றையதினம் 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு வேலைத்திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. 

அதில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

இந்நிலையில் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி யாழில் இன்றும் பட்டதாரிகள் போராட்டம் வேலை வாய்ப்பினை வழங்குமாறு கோரி வேலையில்லா பட்டதாரிகள் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.குறித்த பட்டதாரிகள் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்றையதினம் 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு வேலைத்திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement