• Nov 25 2024

இலங்கை கிரிக்கெட் அணிக்கு கிடைத்துள்ள அபார வெற்றி..!!

Tamil nila / Feb 14th 2024, 9:50 pm
image

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே இன்று (14) நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 48.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து  266 ஓட்டங்களை பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிக பட்சமாக Rahmat Shah 65 ஓட்டங்களையும், Azmatullah Omarzai 54 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Pramod Madushan 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில், 267 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 35.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 267 என்ற வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பாக அதிகப்பட்சமாக Pathum Nissanka 118 ஓட்டங்களையும், Avishka Fernando 91 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக  Qais Ahmad 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு கிடைத்துள்ள அபார வெற்றி. ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே இன்று (14) நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 48.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து  266 ஓட்டங்களை பெற்றது.ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிக பட்சமாக Rahmat Shah 65 ஓட்டங்களையும், Azmatullah Omarzai 54 ஓட்டங்களையும் பெற்றனர்.பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Pramod Madushan 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இந்நிலையில், 267 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 35.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 267 என்ற வெற்றி இலக்கை அடைந்தது.இலங்கை அணி சார்பாக அதிகப்பட்சமாக Pathum Nissanka 118 ஓட்டங்களையும், Avishka Fernando 91 ஓட்டங்களையும் பெற்றனர்.பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக  Qais Ahmad 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Advertisement

Advertisement

Advertisement