• Jun 16 2026

அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு பச்சை கொடி- தெருக்களில் இறங்கிய மக்கள்!

Ziya / Jun 15th 2026, 12:04 pm
image

மத்திய கிழக்கில் கடந்த பல மாதங்களாக நீடித்து வந்த முடிவுக்குக் கொண்டுவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ளது. 


இந்த ஒப்பந்தத்தின் மூலம் லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் இஸ்ரேலுடனான சண்டைகள் உடனடியாக முடிவுக்கு வரும் என்று ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. 


இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, லெபனான் நாட்டின் வீதிகளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் திரண்டு விடிய விடிய ஆட்டப் பாட்டத்துடன் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அமைதி விடியலைக் கொண்டாடி வருகின்றனர்.


கடந்த சில நாட்களாக லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய கடுமையான வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்களால் நிலைகுலைந்திருந்த மக்களுக்கு இந்த ஒப்பந்தம் மாபெரும் நிம்மதியை அளித்துள்ளது.


அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகள் இடையே தீவிரமாக நடைபெற்று வந்த ராஜதந்திரப் பேச்சுவார்த்தையின் பலனாக இந்த 60 நாட்கள் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் (MoU) இறுதி செய்யப்பட்டுள்ளது.


 இந்த ஒப்பந்தம் குறித்துத் தெஹ்ரான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த அமைதி உடன்படிக்கையானது வெறும் அமெரிக்கா - ஈரான் உறவோடு நின்றுவிடாமல், இஸ்ரேல் - ஹிஸ்புல்லா மோதல் நிலவும் லெபனான் மற்றும் பிராந்தியத்தின் அனைத்துப் போர் முனைகளையும் உள்ளடக்கியது. சண்டைகளை முற்றிலுமாக நிறுத்துவதற்கு இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன" என்று தெளிவுபடுத்தியுள்ளது.


இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பை அழிப்பது மற்றும் லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் ஆயுதப் பயன்பாட்டைக் குறைப்பது உள்ளிட்ட உலகளாவிய பாதுகாப்புப் பிரச்சினைகளும் தீர்க்கப்படவுள்ளதாக வாஷிங்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு பச்சை கொடி- தெருக்களில் இறங்கிய மக்கள் மத்திய கிழக்கில் கடந்த பல மாதங்களாக நீடித்து வந்த முடிவுக்குக் கொண்டுவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் இஸ்ரேலுடனான சண்டைகள் உடனடியாக முடிவுக்கு வரும் என்று ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, லெபனான் நாட்டின் வீதிகளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் திரண்டு விடிய விடிய ஆட்டப் பாட்டத்துடன் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அமைதி விடியலைக் கொண்டாடி வருகின்றனர்.கடந்த சில நாட்களாக லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய கடுமையான வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்களால் நிலைகுலைந்திருந்த மக்களுக்கு இந்த ஒப்பந்தம் மாபெரும் நிம்மதியை அளித்துள்ளது.அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகள் இடையே தீவிரமாக நடைபெற்று வந்த ராஜதந்திரப் பேச்சுவார்த்தையின் பலனாக இந்த 60 நாட்கள் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் (MoU) இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்துத் தெஹ்ரான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த அமைதி உடன்படிக்கையானது வெறும் அமெரிக்கா - ஈரான் உறவோடு நின்றுவிடாமல், இஸ்ரேல் - ஹிஸ்புல்லா மோதல் நிலவும் லெபனான் மற்றும் பிராந்தியத்தின் அனைத்துப் போர் முனைகளையும் உள்ளடக்கியது. சண்டைகளை முற்றிலுமாக நிறுத்துவதற்கு இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன" என்று தெளிவுபடுத்தியுள்ளது.இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பை அழிப்பது மற்றும் லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் ஆயுதப் பயன்பாட்டைக் குறைப்பது உள்ளிட்ட உலகளாவிய பாதுகாப்புப் பிரச்சினைகளும் தீர்க்கப்படவுள்ளதாக வாஷிங்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement