• Nov 24 2024

மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் மரநடுகை முன்னெடுப்பு...!

Sharmi / Jun 12th 2024, 12:48 pm
image

உலக சுற்றாடல் தினத்தையொட்டி இன்று(12) மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் பலன் தரும் மரக்கன்றுகள் நாட்டப்பட்டது.

இந்நிகழ்வை மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் இயங்கும் வைத்தியசாலை அபிவிருத்தி குழு செயலாளர் க.ராஜ்குமாரின் வேண்டுகோளுக்கு இணங்க தலைநகர் கொழும்பில் உள்ள ஜன மனஷ தனியார் வணிக நிறுவனம் மேற் கொண்டது.

இந்த நிகழ்வு இன்று(12)  மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் மாவட்ட வைத்திய அதிகாரி தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் மஸ்கெலியா பௌத்த விகாரை மத குரு, கிறித்தவ சமய பாதிரியார் மற்றும் இந்து சமய குருக்கள் மற்றும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செஞ்சிலுவை சங்க நுவரெலியா மாவட்ட அதிகாரி,  மஸ்கெலியா பகுதியில் உள்ள அனைத்து தோட்ட அதிகாரிகள்,  பாடசாலை மாணவர்கள் மவுஸ்சாக்கலை நீர் தேக்க பகுதியில் உள்ள இராணுவ அதிகாரிகள்,  தோட்ட வைத்திய அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலையில் உள்ள அனைத்து வைத்தியர்கள் அங்கு பணிபுரியும் உத்தியோகத்தர்கள், பொது சுகாதார அதிகாரிகள், வைத்திய சாலையில் இயங்கும் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வில் வைத்திய அதிகாரி மற்றும் பொலிஸ் அதிகாரி ஜன மனஷ தனியார் வணிக உரிமையாளர் மற்றும் தோட்ட அதிகாரி , வைத்தியசாலை அபிவிருத்தி குழு செயலாளர் க.இராஜ்குமார் உரையாற்றினார்கள்.

இறுதியாக வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணியில் 200 மரக்கன்றுகள் நாட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் மரநடுகை முன்னெடுப்பு. உலக சுற்றாடல் தினத்தையொட்டி இன்று(12) மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் பலன் தரும் மரக்கன்றுகள் நாட்டப்பட்டது.இந்நிகழ்வை மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் இயங்கும் வைத்தியசாலை அபிவிருத்தி குழு செயலாளர் க.ராஜ்குமாரின் வேண்டுகோளுக்கு இணங்க தலைநகர் கொழும்பில் உள்ள ஜன மனஷ தனியார் வணிக நிறுவனம் மேற் கொண்டது.இந்த நிகழ்வு இன்று(12)  மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் மாவட்ட வைத்திய அதிகாரி தலைமையில் இடம்பெற்றது.நிகழ்வில் மஸ்கெலியா பௌத்த விகாரை மத குரு, கிறித்தவ சமய பாதிரியார் மற்றும் இந்து சமய குருக்கள் மற்றும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செஞ்சிலுவை சங்க நுவரெலியா மாவட்ட அதிகாரி,  மஸ்கெலியா பகுதியில் உள்ள அனைத்து தோட்ட அதிகாரிகள்,  பாடசாலை மாணவர்கள் மவுஸ்சாக்கலை நீர் தேக்க பகுதியில் உள்ள இராணுவ அதிகாரிகள்,  தோட்ட வைத்திய அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலையில் உள்ள அனைத்து வைத்தியர்கள் அங்கு பணிபுரியும் உத்தியோகத்தர்கள், பொது சுகாதார அதிகாரிகள், வைத்திய சாலையில் இயங்கும் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நிகழ்வில் வைத்திய அதிகாரி மற்றும் பொலிஸ் அதிகாரி ஜன மனஷ தனியார் வணிக உரிமையாளர் மற்றும் தோட்ட அதிகாரி , வைத்தியசாலை அபிவிருத்தி குழு செயலாளர் க.இராஜ்குமார் உரையாற்றினார்கள்.இறுதியாக வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணியில் 200 மரக்கன்றுகள் நாட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement