• Nov 19 2024

'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' யாழில் விழிப்புணர்வு கண்காட்சி..!

Sharmi / Aug 27th 2024, 10:59 pm
image

யாழ் பல்கலைக்கழகத்தின் வடமாகாண நீர் பாதுகாப்பு செயற்றிட்டமும் (WASPAR), இளைய நீர்த்துறையாளர் வட்டம் (YWP) ஆகியவற்றின் ஏற்பாட்டில் வடமாகாண நீர்ப்பாசன திணைக்களம், நீர்வளச் சபை உள்ளிட்ட பல்வேறு நீர் சார்ந்த அரச திணைக்களங்களும், அமைப்புகளும் இணைந்து பங்கேற்ற "நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி" என்கிற தொனிப்பொருளிலான கண்காட்சி நேற்றைய தினம்(26) மாலை யாழ்ப்பாணம் நல்லூரில் ஆரம்பமானது.

நல்லூர் பெருந்திருவிழாவை ஒட்டி மக்களுக்கு நீர் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  யாழ். மாநகரசபையின் தீயணைப்பு படை வளாகத்தில் ஆரம்பமான இக்கண்காட்சியில், வடக்கு பிரதம செயலாளர் எஸ். இளங்கோவன், WASPAR செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எஸ். சிறீஸ்கந்தராஜா மற்றும் நீர்ப்பாசன பொறியியலாளர்கள், பொதுமக்கள், நீர் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள குறித்த கண்காட்சியில் நீர் சார்ந்த ஆய்வு விபரங்கள், விஞ்ஞான விளக்கங்கள், கலந்துரையாடல்கள், விளையாட்டுகள், இளையோர்கள் - சிறார்களுக்கான பரிசுப் போட்டிகள் என பலவகையான நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வரைமுறையின்றி அதிகமாக குழாய் கிணறுகளை அமைப்பதன் மூலம் நன்னீர் உவர் நீராக மாற்றப்படும் அபாயம் தொடர்பிலும், வடக்கிற்கான ஆறு தொடர்பிலான விளக்கங்களும், நீரில் என்னென்ன பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலமாக நீரில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் அறிந்து கொள்ளவும் இக்கண்காட்சி உறுதுணையாக இருப்பதாக கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்கள் கருத்து தெரிவித்திருந்தனர். 

நல்லூர் திருவிழாவுக்கு வரும் பொதுமக்கள் வடமாகாண நிலத்தடி நீர்வளத்தின்பால் கவனம் செலுத்தி குறித்த கண்காட்சியை பார்வையிட்டு நீர் சார்ந்த மேலும் பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளுமாறும் இதன் ஏற்பாட்டாளர்கள் வேண்டிக் கொண்டுள்ளனர்.


'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' யாழில் விழிப்புணர்வு கண்காட்சி. யாழ் பல்கலைக்கழகத்தின் வடமாகாண நீர் பாதுகாப்பு செயற்றிட்டமும் (WASPAR), இளைய நீர்த்துறையாளர் வட்டம் (YWP) ஆகியவற்றின் ஏற்பாட்டில் வடமாகாண நீர்ப்பாசன திணைக்களம், நீர்வளச் சபை உள்ளிட்ட பல்வேறு நீர் சார்ந்த அரச திணைக்களங்களும், அமைப்புகளும் இணைந்து பங்கேற்ற "நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி" என்கிற தொனிப்பொருளிலான கண்காட்சி நேற்றைய தினம்(26) மாலை யாழ்ப்பாணம் நல்லூரில் ஆரம்பமானது.நல்லூர் பெருந்திருவிழாவை ஒட்டி மக்களுக்கு நீர் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  யாழ். மாநகரசபையின் தீயணைப்பு படை வளாகத்தில் ஆரம்பமான இக்கண்காட்சியில், வடக்கு பிரதம செயலாளர் எஸ். இளங்கோவன், WASPAR செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எஸ். சிறீஸ்கந்தராஜா மற்றும் நீர்ப்பாசன பொறியியலாளர்கள், பொதுமக்கள், நீர் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள குறித்த கண்காட்சியில் நீர் சார்ந்த ஆய்வு விபரங்கள், விஞ்ஞான விளக்கங்கள், கலந்துரையாடல்கள், விளையாட்டுகள், இளையோர்கள் - சிறார்களுக்கான பரிசுப் போட்டிகள் என பலவகையான நிகழ்வுகளும் இடம்பெற்றன.வரைமுறையின்றி அதிகமாக குழாய் கிணறுகளை அமைப்பதன் மூலம் நன்னீர் உவர் நீராக மாற்றப்படும் அபாயம் தொடர்பிலும், வடக்கிற்கான ஆறு தொடர்பிலான விளக்கங்களும், நீரில் என்னென்ன பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலமாக நீரில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் அறிந்து கொள்ளவும் இக்கண்காட்சி உறுதுணையாக இருப்பதாக கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்கள் கருத்து தெரிவித்திருந்தனர். நல்லூர் திருவிழாவுக்கு வரும் பொதுமக்கள் வடமாகாண நிலத்தடி நீர்வளத்தின்பால் கவனம் செலுத்தி குறித்த கண்காட்சியை பார்வையிட்டு நீர் சார்ந்த மேலும் பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளுமாறும் இதன் ஏற்பாட்டாளர்கள் வேண்டிக் கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement