• Jan 22 2025

வங்கிக்கு முன்னால் நிறுத்தப்பட்ட காரிலிருந்து துப்பாக்கி மீட்பு

Chithra / Jan 6th 2025, 9:00 am
image


பத்தரமுல்லை - தலாஹேன பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த வங்கிக்கு முன்பாக கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை நேற்று காலை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர். 

மதியம் வரையும் அந்த கார் அங்கிருந்து அகற்றப்படாததால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து காரை சோதனையிட்ட போது அதில் போலி துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். 

குறித்த கார் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


 

வங்கிக்கு முன்னால் நிறுத்தப்பட்ட காரிலிருந்து துப்பாக்கி மீட்பு பத்தரமுல்லை - தலாஹேன பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வங்கிக்கு முன்பாக கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை நேற்று காலை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர். மதியம் வரையும் அந்த கார் அங்கிருந்து அகற்றப்படாததால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து காரை சோதனையிட்ட போது அதில் போலி துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். குறித்த கார் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement