வவுனியாவில் மழையின் தாக்கம் காரணமாக டெங்கு நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதையடுத்து அதனை கட்டுப்படுத்தும் விசேட செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் ஏற்பாட்டில் சுகாதார பரிசோதகர்கள், பொலிசார், இராணுவத்தினர் இணைந்து நகர சபையின் பங்களிப்புடன் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை துப்பரவு செய்யும் பணியினை முன்னெடுத்திருந்தனர்.
இதன்படி, வவுனியா நகரம், வைரவபுளியங்குளம், இறம்பைக்குளம், ராணிமில் வீதி, வெளிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் குழுவாக சென்ற இவர்கள் வீதியேரங்கள், வாய்கல்களில் காணப்பட்ட பொலித்தீன்கள், வெற்று போத்தல்கள், சிரட்டைகள், மட்பாண்டத் துண்டங்கள், ரயர்கள் மற்றும் நீர் தேங்கி நிற்க கூடிய பொருட்களை அகற்றி அப் பகுதியை சுத்தம் செய்தனர்.
வவுனியாவில் டெங்கு நோயை கட்டுப்படுத்த விசேட செயற்திட்டம் வவுனியாவில் மழையின் தாக்கம் காரணமாக டெங்கு நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதையடுத்து அதனை கட்டுப்படுத்தும் விசேட செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் ஏற்பாட்டில் சுகாதார பரிசோதகர்கள், பொலிசார், இராணுவத்தினர் இணைந்து நகர சபையின் பங்களிப்புடன் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை துப்பரவு செய்யும் பணியினை முன்னெடுத்திருந்தனர்.இதன்படி, வவுனியா நகரம், வைரவபுளியங்குளம், இறம்பைக்குளம், ராணிமில் வீதி, வெளிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் குழுவாக சென்ற இவர்கள் வீதியேரங்கள், வாய்கல்களில் காணப்பட்ட பொலித்தீன்கள், வெற்று போத்தல்கள், சிரட்டைகள், மட்பாண்டத் துண்டங்கள், ரயர்கள் மற்றும் நீர் தேங்கி நிற்க கூடிய பொருட்களை அகற்றி அப் பகுதியை சுத்தம் செய்தனர்.