• Sep 23 2024

இந்தியாவின் பொருளாதார திட்டத்தை முறியடிக்கவே ஹமாஸ் தாக்குதல் - பைடன் அதிர்ச்சி தகவல்..! samugammedia

Tamil nila / Oct 26th 2023, 4:45 pm
image

Advertisement

இந்தியா - ஐரோப்பா இடையிலான பொருளாதார பெரு வழி திட்டத்தை முறியடிக்கவே, இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.

கடந்த செப்., மாதம், டெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டில், உலகின் பெரும்பகுதிகளை இணைக்கும் வகையிலான மெகா பொருளாதார பெருவழிப்பாதை திட்டம் அறிவிக்கப்பட்டது. 

இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை கையெழுத்திட்டன.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஐரோப்பிய யூனியனின் தலைவர்களுடன் இணைந்து பிரதமர் மோடி இந்த திட்டத்தை அறிவித்தார். 

இந்த திட்டம், இந்தியா - மேற்கு ஆசியா நாடுகள்- ஐரோப்பிய நாடுகளை இணைக்க உள்ளன. இந்த திட்டத்தில் இந்தியா, ஐரோப்பிய யூனியன், ஐக்கிய அரபு எமீரேட்ஸ், சவுதி அரேபியா, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா இணைந்துள்ளன.

இந்நிலையில் இந்த பெருவழிப்பாதை திட்டம், சீனா செயல்படுத்தி வரும் பெல்ட் அண்ட் ரோடு' திட்டத்திற்கு போட்டியாக இருக்கும் என அந்நாடு கருதியது.

 ஈரான், கத்தார், சீனா உள்ளிட்ட நாடுகள் இந்த திட்டத்திற்கு அதிருப்தி தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், கடந்த 7 ம் திகதி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். 

இதனைத்தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் தீவிரவாதிகளை குறிவைத்து காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இச்சூழ்நிலையில், வாஷிங்டன்னில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 

இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பாவை இணைக்கும் பொருளாதார பொருளாதார பெருவழி திட்டத்தை முறியடிக்கவே,

 ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

இதற்கு என்னிடம் ஆதாரம் கிடையாது. ஆனால், எனது உள்ளுணர்வு இந்த தகவலை என்னிடம் சொல்கிறது.

இஸ்ரேலுக்கான பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் ஒட்டுமொத்த பிராந்திய ஒருங்கிணைப்பு ஆகியவற்றிற்கு நாம் செய்யும் முன்னேற்றப்பணிகளை விட்டுவிட முடியாது.

.கடந்த காலங்களில், இந்த திட்டம் தொடர்பாக ஜோர்டான், எகிப்து, சவுதி அரேபியா, பாலஸ்தீன நாட்டு தலைவர்களுடன் பேசினேன். 

இந்த திட்டம் மூலம் இந்த பிராந்தியத்திற்கு சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையாக இருக்கும் என ஜனாதிபதி பைடன் கூறியுள்ளார்.


இந்தியாவின் பொருளாதார திட்டத்தை முறியடிக்கவே ஹமாஸ் தாக்குதல் - பைடன் அதிர்ச்சி தகவல். samugammedia இந்தியா - ஐரோப்பா இடையிலான பொருளாதார பெரு வழி திட்டத்தை முறியடிக்கவே, இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.கடந்த செப்., மாதம், டெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டில், உலகின் பெரும்பகுதிகளை இணைக்கும் வகையிலான மெகா பொருளாதார பெருவழிப்பாதை திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை கையெழுத்திட்டன.அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஐரோப்பிய யூனியனின் தலைவர்களுடன் இணைந்து பிரதமர் மோடி இந்த திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டம், இந்தியா - மேற்கு ஆசியா நாடுகள்- ஐரோப்பிய நாடுகளை இணைக்க உள்ளன. இந்த திட்டத்தில் இந்தியா, ஐரோப்பிய யூனியன், ஐக்கிய அரபு எமீரேட்ஸ், சவுதி அரேபியா, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா இணைந்துள்ளன.இந்நிலையில் இந்த பெருவழிப்பாதை திட்டம், சீனா செயல்படுத்தி வரும் பெல்ட் அண்ட் ரோடு' திட்டத்திற்கு போட்டியாக இருக்கும் என அந்நாடு கருதியது. ஈரான், கத்தார், சீனா உள்ளிட்ட நாடுகள் இந்த திட்டத்திற்கு அதிருப்தி தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.இந்நிலையில், கடந்த 7 ம் திகதி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இதனைத்தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் தீவிரவாதிகளை குறிவைத்து காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது.இச்சூழ்நிலையில், வாஷிங்டன்னில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பாவை இணைக்கும் பொருளாதார பொருளாதார பெருவழி திட்டத்தை முறியடிக்கவே, ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.இதற்கு என்னிடம் ஆதாரம் கிடையாது. ஆனால், எனது உள்ளுணர்வு இந்த தகவலை என்னிடம் சொல்கிறது.இஸ்ரேலுக்கான பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் ஒட்டுமொத்த பிராந்திய ஒருங்கிணைப்பு ஆகியவற்றிற்கு நாம் செய்யும் முன்னேற்றப்பணிகளை விட்டுவிட முடியாது.கடந்த காலங்களில், இந்த திட்டம் தொடர்பாக ஜோர்டான், எகிப்து, சவுதி அரேபியா, பாலஸ்தீன நாட்டு தலைவர்களுடன் பேசினேன். இந்த திட்டம் மூலம் இந்த பிராந்தியத்திற்கு சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையாக இருக்கும் என ஜனாதிபதி பைடன் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement