• Nov 25 2024

ஜனாதிபதியிடம் "இமயமலைப் பிரகடனம் ” கையளிப்பு...!samugammedia

Anaath / Dec 8th 2023, 1:09 pm
image

சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்கள் நேற்று (07) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அச்சமோ சந்தேகமோ இன்றி, அனைவரும் பெருமையுடனும், நம்பிக்கையுடனும், சம உரிமையுடனும் அமைதியாக வாழக்கூடிய இலங்கையைப் பற்றிய “இமயமலைப் பிரகடனம்” ஒன்றினை கையளித்துள்ளனர். 

குறித்த பிரகடனமானது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், மறுசீரமைப்பு, சமூக நலன் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மையமாகக் கொண்ட 06 முக்கிய விடயங்களை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்த பிரகடனத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததன் பின்னர் இது தொடர்பில் மூன்று நிகாயக்களின் தலைமைத் தேரர்களுடன் கலந்துரையாடுவதாகவும், ஏனைய மதத் தலைவர்களுக்கும் இது குறித்து அறிவிக்கவுள்ளதாகவும் சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் தெரிவித்துள்ளனர். 

குறித்த நிகழ்வின்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பல வருடங்களாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் கடந்த பொருளாதார நெருக்கடிக்கும் முகங்கொடுத்து பெரும் இன்னல்களை எதிர்கொண்டதாக தெரிவித்தார். ஆனால், பொருளாதார நெருக்கடியின்போது, எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் கசப்பான அனுபவங்கள் ஒரு சில மாதங்கள் நீடித்த்தாகவும், வடக்கு கிழக்கு மக்கள் பல வருடங்களாக அனுபவித்ததாகவும் ஜனாதிபதி நினைவு படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதியிடம் "இமயமலைப் பிரகடனம் ” கையளிப்பு.samugammedia சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்கள் நேற்று (07) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அச்சமோ சந்தேகமோ இன்றி, அனைவரும் பெருமையுடனும், நம்பிக்கையுடனும், சம உரிமையுடனும் அமைதியாக வாழக்கூடிய இலங்கையைப் பற்றிய “இமயமலைப் பிரகடனம்” ஒன்றினை கையளித்துள்ளனர். குறித்த பிரகடனமானது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், மறுசீரமைப்பு, சமூக நலன் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மையமாகக் கொண்ட 06 முக்கிய விடயங்களை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த பிரகடனத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததன் பின்னர் இது தொடர்பில் மூன்று நிகாயக்களின் தலைமைத் தேரர்களுடன் கலந்துரையாடுவதாகவும், ஏனைய மதத் தலைவர்களுக்கும் இது குறித்து அறிவிக்கவுள்ளதாகவும் சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த நிகழ்வின்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பல வருடங்களாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் கடந்த பொருளாதார நெருக்கடிக்கும் முகங்கொடுத்து பெரும் இன்னல்களை எதிர்கொண்டதாக தெரிவித்தார். ஆனால், பொருளாதார நெருக்கடியின்போது, எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் கசப்பான அனுபவங்கள் ஒரு சில மாதங்கள் நீடித்த்தாகவும், வடக்கு கிழக்கு மக்கள் பல வருடங்களாக அனுபவித்ததாகவும் ஜனாதிபதி நினைவு படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement