• Oct 18 2024

அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் கொழும்பு மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு..!

Chithra / Jul 12th 2024, 11:06 am
image

Advertisement

 

கொழும்பு மாவட்டத்தில் உள்ள 50,000 அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு உறுதிப் பத்திரங்களை வழங்கும் ஆரம்பக் கட்ட நிகழ்வு எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான மிஹிந்து செத்புர, சிரிசர உயன மற்றும் மெட்ரோ வீட்டுத் தொகுதிகளின் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கும், 

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்பட்ட வீட்டுத் தொகுதிகளில் வசிக்கும் சுமார் 1,500 பேருக்கும் உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்குரிய உறுதிப் பத்திரம் இல்லாததால் பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.

இந்த உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்குச் சட்டமா அதிபரிடம் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும்,

கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபையின் சான்றிதழ் பெற்ற அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் இந்த உறுதிப் பத்திரம் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.


அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் கொழும்பு மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு.  கொழும்பு மாவட்டத்தில் உள்ள 50,000 அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு உறுதிப் பத்திரங்களை வழங்கும் ஆரம்பக் கட்ட நிகழ்வு எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளது.கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது.நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான மிஹிந்து செத்புர, சிரிசர உயன மற்றும் மெட்ரோ வீட்டுத் தொகுதிகளின் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கும், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்பட்ட வீட்டுத் தொகுதிகளில் வசிக்கும் சுமார் 1,500 பேருக்கும் உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்குரிய உறுதிப் பத்திரம் இல்லாததால் பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.இந்த உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்குச் சட்டமா அதிபரிடம் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும்,கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபையின் சான்றிதழ் பெற்ற அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் இந்த உறுதிப் பத்திரம் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement