• May 12 2024

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி

Chithra / Jan 17th 2023, 3:12 pm
image

Advertisement

இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு ஆதரவளிக்க இந்தியா உத்தியோகப்பூர்வமாக தீர்மானித்துள்ளதாக ப்ளூம்பேர்க் இணையத்தளம், பெயர் குறிப்பிடவிரும்பான முக்கிய நபர் ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் கடன் மறுசீரமைப்பு அறிவிப்பு கிடைக்கப் பெறும் வரை, பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் பணத்தை பெற்றுக்கொள்வதற்கு தடையாக இருந்தது.

இலங்கையின் கடன் வழங்குநர்களின் முக்கிய தரப்பாக காணப்படுகின்ற இந்தியா, நேற்றைய தினம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பிலான அறிவிப்பை, இந்திய அரசாங்கம் மிக விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியா வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் நாளைய தினம் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர், இந்த கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான அறிவிப்புடன் இலங்கைக்கு வருகைத் தரக்கூடும் என கூறப்படுகின்றது

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு ஆதரவளிக்க இந்தியா உத்தியோகப்பூர்வமாக தீர்மானித்துள்ளதாக ப்ளூம்பேர்க் இணையத்தளம், பெயர் குறிப்பிடவிரும்பான முக்கிய நபர் ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.இந்தியாவின் கடன் மறுசீரமைப்பு அறிவிப்பு கிடைக்கப் பெறும் வரை, பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் பணத்தை பெற்றுக்கொள்வதற்கு தடையாக இருந்தது.இலங்கையின் கடன் வழங்குநர்களின் முக்கிய தரப்பாக காணப்படுகின்ற இந்தியா, நேற்றைய தினம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பிலான அறிவிப்பை, இந்திய அரசாங்கம் மிக விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இந்தியா வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் நாளைய தினம் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.இந்த நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர், இந்த கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான அறிவிப்புடன் இலங்கைக்கு வருகைத் தரக்கூடும் என கூறப்படுகின்றது

Advertisement

Advertisement

Advertisement