• Jan 16 2025

புதிய மின் இணைப்பு பெறவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்..! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு..!

Chithra / Feb 1st 2024, 1:03 pm
image


 

புதிய மின் இணைப்புகளுக்கு ஒரே நேரத்தில் பணம் செலுத்த முடியாத விண்ணப்பதாரர்களுக்கு தவணை முறையில் பணம் செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்சார சபையிடம் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சார சபையின் எஞ்சிய சேவைகளுக்கு தவணை முறையில் பணம் செலுத்துவதற்கு வசதி செய்து தருமாறு பணிப்புரை விடுத்ததாகவும், 

இந்த வசதிகளை விரைவில் அறிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கமைய, இவ்வருட மின் உற்பத்தித் திட்டம், அட்டவணை, சேவைச் செலவுகள், மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருளின் விலை, காலநிலை முன்னறிவிப்புக்கள் தொடர்பில் மின்சார சபையின் செயற்பாட்டுப் பிரிவுடன் கலந்துரையாடியதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

புதிய மின் இணைப்பு பெறவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல். அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு.  புதிய மின் இணைப்புகளுக்கு ஒரே நேரத்தில் பணம் செலுத்த முடியாத விண்ணப்பதாரர்களுக்கு தவணை முறையில் பணம் செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்சார சபையிடம் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.மின்சார சபையின் எஞ்சிய சேவைகளுக்கு தவணை முறையில் பணம் செலுத்துவதற்கு வசதி செய்து தருமாறு பணிப்புரை விடுத்ததாகவும், இந்த வசதிகளை விரைவில் அறிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.இதற்கமைய, இவ்வருட மின் உற்பத்தித் திட்டம், அட்டவணை, சேவைச் செலவுகள், மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருளின் விலை, காலநிலை முன்னறிவிப்புக்கள் தொடர்பில் மின்சார சபையின் செயற்பாட்டுப் பிரிவுடன் கலந்துரையாடியதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement