புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்ற அநுரகுமார திஸாநாயக்கவினால் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைச்சரவைப் பதவியேற்பு நிகழ்வு இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
அதற்கமைய, புதிய பிரதமராக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
அவர் இலங்கையின் பிரதமராகப் பதவியேற்கும் மூன்றாவது பெண் ஆவார்.
இதற்கு முன்னதாக உலகின் முதல் பெண் பிரதமரான ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் இலங்கையின் பிரதமராகப் பதவி வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவையின் தலைவரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், லக்ஷ்மன் நிபுண ஆரச்சி ஆகிய 4 பேரிடையே அமைச்சுகள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் புதிய அமைச்சரவை இடைக்கால அமைச்சரவை ஆகும். இந்த அமைச்சரவை நியமனத்தையடுத்து இன்று நள்ளிரவுடன் நாடாளுமன்றமும் கலைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்ற அநுரகுமார திஸாநாயக்கவினால் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.இந்த அமைச்சரவைப் பதவியேற்பு நிகழ்வு இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.அதற்கமைய, புதிய பிரதமராக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.அவர் இலங்கையின் பிரதமராகப் பதவியேற்கும் மூன்றாவது பெண் ஆவார்.இதற்கு முன்னதாக உலகின் முதல் பெண் பிரதமரான ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் இலங்கையின் பிரதமராகப் பதவி வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.அமைச்சரவையின் தலைவரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், லக்ஷ்மன் நிபுண ஆரச்சி ஆகிய 4 பேரிடையே அமைச்சுகள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்தப் புதிய அமைச்சரவை இடைக்கால அமைச்சரவை ஆகும். இந்த அமைச்சரவை நியமனத்தையடுத்து இன்று நள்ளிரவுடன் நாடாளுமன்றமும் கலைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.