• Nov 22 2024

பொதுத் தேர்தலில் களமிறங்க தயங்கும் காஞ்சன உள்ளிட்ட இளம் அரசியல்வாதிகள்! வெளியான தகவல்

Chithra / Oct 4th 2024, 8:16 am
image

 

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர உள்ளிட்ட சில முக்கிய முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடப் போவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், முன்னாள் ராஜாங்க அமைச்சர்களான பிரமித பண்டார தென்னக்கோன் மற்றும் ஹேசா விதானகே ஆகியோரும் எதிர்வரும் பெர்துத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தீர்மானித்துள்ளனர்.

இந்த மூன்று அமைச்சர்களுக்கும் நெருக்கமான தரப்புக்கள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளன.

தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த மூவரும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பிலான தங்களது நிலைப்பாட்டை இதுவரையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மூவரும் கடந்த 2019ம் ஆண்டு பொது தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

பொதுத் தேர்தலில் களமிறங்க தயங்கும் காஞ்சன உள்ளிட்ட இளம் அரசியல்வாதிகள் வெளியான தகவல்  எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர உள்ளிட்ட சில முக்கிய முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடப் போவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.மேலும், முன்னாள் ராஜாங்க அமைச்சர்களான பிரமித பண்டார தென்னக்கோன் மற்றும் ஹேசா விதானகே ஆகியோரும் எதிர்வரும் பெர்துத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தீர்மானித்துள்ளனர்.இந்த மூன்று அமைச்சர்களுக்கும் நெருக்கமான தரப்புக்கள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளன.தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.எனினும், இந்த மூவரும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பிலான தங்களது நிலைப்பாட்டை இதுவரையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த மூவரும் கடந்த 2019ம் ஆண்டு பொது தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement