• Sep 08 2024

யாழ். சுழிபுரத்தில் திடீரென முளைத்த புத்தர் சிலை - தொடரும் ஆக்கிரமிப்பு..! குழப்பத்தில் மக்கள்

Chithra / Mar 5th 2024, 12:34 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளமையால் அப்பகுதி மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த புத்தர் சிலை இரண்டு நாட்களுக்கு முதல் வைக்கப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.

சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

அப்பகுதி கடற்படையினரால் புத்தர் சிலை வைக்கப்பட்டு இருக்கலாம் என  மக்கள் சந்தேகிக்கும் நிலையில், 

புத்தர் சிலையை அடுத்து விகாரை தோற்றம் பெறலாம் என அச்சப்படுகின்றனர்.

அத்தோடு இந்துப் பிரதேசமாக இருக்கும் இந்த இடத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஆராய்ந்து, புத்தர் சிலையை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ். சுழிபுரத்தில் திடீரென முளைத்த புத்தர் சிலை - தொடரும் ஆக்கிரமிப்பு. குழப்பத்தில் மக்கள் யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளமையால் அப்பகுதி மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.குறித்த புத்தர் சிலை இரண்டு நாட்களுக்கு முதல் வைக்கப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.அப்பகுதி கடற்படையினரால் புத்தர் சிலை வைக்கப்பட்டு இருக்கலாம் என  மக்கள் சந்தேகிக்கும் நிலையில், புத்தர் சிலையை அடுத்து விகாரை தோற்றம் பெறலாம் என அச்சப்படுகின்றனர்.அத்தோடு இந்துப் பிரதேசமாக இருக்கும் இந்த இடத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஆராய்ந்து, புத்தர் சிலையை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement