யாழ்ப்பாண கல்வி வலயத்தின் 'வர்ண இரவு' இன்று யாழ். திருக்குடும்ப கன்னியர்மட தேசியப் பாடசாலையின் ஜூபிலி மண்டபத்தில் இடம்பெற்றது.
யாழ். கல்வி வலய உடற்கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு யாழ். வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.மாலதி முகுந்தன் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வின் முதன்மை விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் திரு.எம்.பற்றிக்டிறஞ்சன் கலந்துகொண்டிருந்தார்.
கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணம் தேசிய கல்வியில் கல்லூரியின் விரிவுரையாளர் திரு.எஸ் வாகீசன் மற்றும் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையின் விரிவுரையாளர் பி.பாஸ்கரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
யாழ்ப்பாணக் கல்வி வலயத்திலிருந்து வலய, மாகாண, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் சாதனையாளர்களாக மிளிர்ந்த மாணவர்களும் அவற்றின் பயிற்றுவிப்பாளர்களும் இதன்போது வெற்றிக்கிண்ணங்களும் வெற்றிக்கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வின் போது உடற்கல்வித்துறையில் 28 வருடங்கள் சேவையாற்றிய யாழ். கல்வி வலய உடற்கல்வித்துறை ஆசிரி ஆலோசகர் திரு.ந.ஸ்ரீமுருகதாஸ்காந்தன் விருந்தினர்களால் கௌரவிக்கப்பட்டார். யாழ். கல்வி வலயத்தினை சேர்ந்த பாடசாலை மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் வர்ண இரவு நிகழ்வை அலங்கரித்தன.
யாழ். கல்வி வலயத்தின் வர்ண இரவு நிகழ்வு - சாதனை புரிந்தோருக்கு கௌரவிப்பு யாழ்ப்பாண கல்வி வலயத்தின் 'வர்ண இரவு' இன்று யாழ். திருக்குடும்ப கன்னியர்மட தேசியப் பாடசாலையின் ஜூபிலி மண்டபத்தில் இடம்பெற்றது.யாழ். கல்வி வலய உடற்கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு யாழ். வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.மாலதி முகுந்தன் தலைமையில் இடம்பெற்றது.நிகழ்வின் முதன்மை விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் திரு.எம்.பற்றிக்டிறஞ்சன் கலந்துகொண்டிருந்தார்.கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணம் தேசிய கல்வியில் கல்லூரியின் விரிவுரையாளர் திரு.எஸ் வாகீசன் மற்றும் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையின் விரிவுரையாளர் பி.பாஸ்கரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். யாழ்ப்பாணக் கல்வி வலயத்திலிருந்து வலய, மாகாண, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் சாதனையாளர்களாக மிளிர்ந்த மாணவர்களும் அவற்றின் பயிற்றுவிப்பாளர்களும் இதன்போது வெற்றிக்கிண்ணங்களும் வெற்றிக்கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இந்நிகழ்வில் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.இந்நிகழ்வின் போது உடற்கல்வித்துறையில் 28 வருடங்கள் சேவையாற்றிய யாழ். கல்வி வலய உடற்கல்வித்துறை ஆசிரி ஆலோசகர் திரு.ந.ஸ்ரீமுருகதாஸ்காந்தன் விருந்தினர்களால் கௌரவிக்கப்பட்டார். யாழ். கல்வி வலயத்தினை சேர்ந்த பாடசாலை மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் வர்ண இரவு நிகழ்வை அலங்கரித்தன.