• Apr 01 2025

யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற உள்ளூர் உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனையும்!

Chithra / Mar 28th 2025, 4:17 pm
image


சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு - பெண் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியும் விற்பனையும் இன்றையதினம் காலை   மாவட்டச் செயலக வளாகத்தில் அரச அதிபர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது வரவேற்புரை, தலைமையுரை என்பன இடம்பெற்றதுடன்,

பாலம் செயற்றிட்டத்தின் நிதி அனுசரணையில் பிரதேச செயலக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 15 பெண் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்படன.

யாழில் உள்ள அனைத்து பிரதேசத்தில் உள்ள சகல பிரதேச செயலக பிரிவில் இருந்தும் சுயதொழிலில் ஈடுபடும் பெண்கள் தமது உற்பத்திப் பொருட்களை இங்கு காட்சிப்படுத்தி விற்பனை செய்தனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரச அதிபர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மேலதிக அரச அதிபர் (காணி) க.சிறீமோகனன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி. உ. தர்சினி, பாலம் செயற்திட்டத்தின் முகாமையாளர், திட்ட முகாமையாளர் யூட் நிசாந்தன் (வேல்ட் விஷன்) 

வி.பி.டோல்ற்றன் பிரகாஸ் (சிரேஷ்ட திட்ட இணைப்பாளர்) மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உதவியாளர்கள், மாவட்ட மகளிர் சம்மேளன அங்கத்தினர்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.


யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற உள்ளூர் உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனையும் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு - பெண் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியும் விற்பனையும் இன்றையதினம் காலை   மாவட்டச் செயலக வளாகத்தில் அரச அதிபர் தலைமையில் நடைபெற்றது.இதன்போது வரவேற்புரை, தலைமையுரை என்பன இடம்பெற்றதுடன்,பாலம் செயற்றிட்டத்தின் நிதி அனுசரணையில் பிரதேச செயலக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 15 பெண் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்படன.யாழில் உள்ள அனைத்து பிரதேசத்தில் உள்ள சகல பிரதேச செயலக பிரிவில் இருந்தும் சுயதொழிலில் ஈடுபடும் பெண்கள் தமது உற்பத்திப் பொருட்களை இங்கு காட்சிப்படுத்தி விற்பனை செய்தனர்.யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரச அதிபர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மேலதிக அரச அதிபர் (காணி) க.சிறீமோகனன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி. உ. தர்சினி, பாலம் செயற்திட்டத்தின் முகாமையாளர், திட்ட முகாமையாளர் யூட் நிசாந்தன் (வேல்ட் விஷன்) வி.பி.டோல்ற்றன் பிரகாஸ் (சிரேஷ்ட திட்ட இணைப்பாளர்) மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உதவியாளர்கள், மாவட்ட மகளிர் சம்மேளன அங்கத்தினர்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now