யாழ்ப்பாணத்தில் போதைவஸ்துடன் யார் சம்பந்தப்பட்டாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிசாரை கடுமையாக எச்சரித்தார்.
இன்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் போதைவஸ்து விடயம் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
அண்மையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப் பொருள் கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரது யாழ்ப்பாணத்தில் உள்ள வீடு பொலிசாரால் பரிசோதனையிட சென்றபோது அங்கே பரிசோதனையிட அனுமதி வழங்கப்படாமை தொடர்பில் கேள்வி எழுப்பிய அமைச்சர்,
அவ்வாறு நீங்கள் செயற்பட முடியாது எவராக இருந்தாலும் நீங்கள் உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் போதைவஸ்துடன் தொடர்புடையோர் யாருடைய செல்வாக்கினையும், பயன்படுத்த முடியாது.
யாராக இருந்தாலும் கட்டாயமாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொலிசார் அந்த விடயத்தில் தவறிழைக்கக் கூடாது.
என்னுடைய பெயரை பாவித்தால் கூட நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
யாழ். பொலிசாரை கடுமையாக எச்சரித்த கடற்தொழில் அமைச்சர். யாழ்ப்பாணத்தில் போதைவஸ்துடன் யார் சம்பந்தப்பட்டாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிசாரை கடுமையாக எச்சரித்தார்.இன்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் போதைவஸ்து விடயம் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்அண்மையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப் பொருள் கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டார்.அவரது யாழ்ப்பாணத்தில் உள்ள வீடு பொலிசாரால் பரிசோதனையிட சென்றபோது அங்கே பரிசோதனையிட அனுமதி வழங்கப்படாமை தொடர்பில் கேள்வி எழுப்பிய அமைச்சர், அவ்வாறு நீங்கள் செயற்பட முடியாது எவராக இருந்தாலும் நீங்கள் உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என தெரிவித்தார்.வடக்கு மாகாணத்தில் போதைவஸ்துடன் தொடர்புடையோர் யாருடைய செல்வாக்கினையும், பயன்படுத்த முடியாது.யாராக இருந்தாலும் கட்டாயமாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பொலிசார் அந்த விடயத்தில் தவறிழைக்கக் கூடாது.என்னுடைய பெயரை பாவித்தால் கூட நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.