• May 03 2024

யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மீது யாழ். தொழிலதிபர் பகிரங்க குற்றச்சாட்டு..! samugammedia

Chithra / Nov 7th 2023, 4:12 pm
image

Advertisement


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி மீது தொழிலதிபர் வாமதேவ தியாகேந்திரன் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இன்றையதினம் (07) அவரது யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 

இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அருகே இருந்த சுபாஷ் ஹோட்டலில் ஓலையால் வேய்ந்த இரண்டு கொட்டகைகள் இருந்தன. 

அது எல்லாவற்றையும் கழற்றி கூரை வேலை, நிலவேலை என அனைத்து வேலைகளையும் செய்து முடித்து, அந்த இடம் பச்சைப் பசேலென இருக்கவேண்டும் என்பதற்காக மில்லியன் கணக்கிலான நிதியை செலவழித்து தோட்டம் எல்லாம் அமைத்தேன்.

கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சொல்கிறார்கள் அந்த இடம் குத்தகைக்கு எடுத்த இடம் என்றும், தற்போது அந்த இடத்தினை மீள  விட்டோம் என்று. இதனை நினைக்கும் போது மிகவும் கவலையாக உள்ளது. 

இதனை பார்க்கும் போது ஏனைய இடங்களுக்கு உதவி செய்யும்போது கூட பயமாக இருக்கிறது. ஏனென்றால் அங்கும் இப்படியான பிரச்சினைகள் வருமா தெரியாது என்பதால்.

இப்போது அனைத்தையும் விசாரித்து தான் நான் செய்கிறேன். யாழ்ப்பாணம் நாவற்குழியில் பொலிஸ் பயிற்சி நிலையம் ஒன்றினை அமைத்துக் கொடுக்கவுள்ளேன். அதற்கான வேலைத்திட்டம் ஆரம்பமாகவுள்ளது.

ஒருவர் என்னை வந்து கேட்டார், வைத்தியசாலைக்கு மருந்து வகைகள் வழங்குவதற்கு தயாராக உள்ளோம். அதனை நாங்கள் உங்கள் ஊடாக செய்ய விரும்புகின்றோம் என்று. 

நான் அவர்களுக்கு கூறினேன், நான் யாரிடமும் பணத்தினை வாங்கி செய்வதில்லை. ஆனால் அதற்கான ஏற்பாடு செய்து தருகிறேன் என்று. 

அதன்பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்திக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு குறித்த விடயத்தை தெரியப்படுத்தினேன்.

அவர் தான் கூட்டத்தில் இருப்பதாகவும், பின்னர் என்னை தொடர்புகொள்வதாகவும் கூறினார். நான் அவரது அழைப்புக்காக காத்திருந்தேன். 

ஆனால் அவரிடமிருந்து அழைப்பு வரவில்லை. பின்னர் நான் மட்டக்களப்பில் உள்ள வைத்தியசாலைக்கு அந்த உதவித்திட்டத்தை ஏற்பாடு செய்து வழங்கி விட்டேன். அவர்கள் தொடர்ந்து அந்த வைத்தியசாலைக்கு தான் இனி செய்வார்கள்.

நானும் சுதன் என்ற இளைஞனும் இணைந்து அண்மையில், இந்தியாவில் உள்ள பிரபல தொலைக்காட்சி ஒன்றில் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு யாழ்ப்பாணத்தை சேர்ந்த கில்மிஷா, மலையகத்தை சேர்ந்த அஷானி மற்றும் அந்த நிகழ்ச்சியில் பங்குபற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த பிள்ளைகளுக்கு மில்லியன் கணக்கிலான நிதியை வழங்கியுள்ளோம்.

நாங்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான ஏற்பாட்டினை என்னுடன் வந்த சுதன் என்பவரே ஒழுங்கமைத்தார். 

நாங்கள் இலங்கையில் இருந்து வருகின்றோம் என்று தெரிந்ததும் நடுவர்கள் உட்பட அனைவரும் எழுந்து நின்று எங்களுக்கு மரியாதை செலுத்தினார்கள். அது எமக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது.

மலையக சிறுமி அஷானிக்கு அமைச்சர் உட்பட பலர் உதவிகளை செய்வதாக கூறினார்கள். அந்த கிராமத்தையே தத்தெடுப்பதாக ஒருவர் கூறினார். 

அவர்கள் அனைவரும் உதவி செய்திருந்தால் கோடிக்கணக்கான நிதி அந்த சிறுமிக்கு சேர்ந்திருக்கும். ஆனால் அந்த சிறுமியின் கணக்கினை பரிசீலித்து பார்க்கும் போது அந்தளவுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அந்த சிறுமியின் பெயரை வைத்துக் கொண்டு வேறு சிலர் பயனடைகின்றார்கள்.

அண்மையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடாத்தப்படும் இசை நிகழ்ச்சிக்கு நிகரான நிகழ்ச்சி ஒன்றினை யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் நடாத்தவுள்ளேன்.

அந்த நிகழ்ச்சியில் அனைத்து வயதுப் பிரிவினரும் கலந்துகொள்ளலாம். இரண்டு சுற்றுக்கள் மூலம் திறமைசாலிகள் தெரிவுசெய்யப்பட்டு இறுதியில் பெறுமதி மிக்க பரிசில்கள் வழங்கப்படும்.

உதவி தேவையானவர் என்னிடம் வரலாம். உண்மையில் உதவி தேவையுடைய வர்களுக்கு எந்த நேரமும் உதவி செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மீது யாழ். தொழிலதிபர் பகிரங்க குற்றச்சாட்டு. samugammedia யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி மீது தொழிலதிபர் வாமதேவ தியாகேந்திரன் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.இன்றையதினம் (07) அவரது யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அருகே இருந்த சுபாஷ் ஹோட்டலில் ஓலையால் வேய்ந்த இரண்டு கொட்டகைகள் இருந்தன. அது எல்லாவற்றையும் கழற்றி கூரை வேலை, நிலவேலை என அனைத்து வேலைகளையும் செய்து முடித்து, அந்த இடம் பச்சைப் பசேலென இருக்கவேண்டும் என்பதற்காக மில்லியன் கணக்கிலான நிதியை செலவழித்து தோட்டம் எல்லாம் அமைத்தேன்.கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சொல்கிறார்கள் அந்த இடம் குத்தகைக்கு எடுத்த இடம் என்றும், தற்போது அந்த இடத்தினை மீள  விட்டோம் என்று. இதனை நினைக்கும் போது மிகவும் கவலையாக உள்ளது. இதனை பார்க்கும் போது ஏனைய இடங்களுக்கு உதவி செய்யும்போது கூட பயமாக இருக்கிறது. ஏனென்றால் அங்கும் இப்படியான பிரச்சினைகள் வருமா தெரியாது என்பதால்.இப்போது அனைத்தையும் விசாரித்து தான் நான் செய்கிறேன். யாழ்ப்பாணம் நாவற்குழியில் பொலிஸ் பயிற்சி நிலையம் ஒன்றினை அமைத்துக் கொடுக்கவுள்ளேன். அதற்கான வேலைத்திட்டம் ஆரம்பமாகவுள்ளது.ஒருவர் என்னை வந்து கேட்டார், வைத்தியசாலைக்கு மருந்து வகைகள் வழங்குவதற்கு தயாராக உள்ளோம். அதனை நாங்கள் உங்கள் ஊடாக செய்ய விரும்புகின்றோம் என்று. நான் அவர்களுக்கு கூறினேன், நான் யாரிடமும் பணத்தினை வாங்கி செய்வதில்லை. ஆனால் அதற்கான ஏற்பாடு செய்து தருகிறேன் என்று. அதன்பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்திக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு குறித்த விடயத்தை தெரியப்படுத்தினேன்.அவர் தான் கூட்டத்தில் இருப்பதாகவும், பின்னர் என்னை தொடர்புகொள்வதாகவும் கூறினார். நான் அவரது அழைப்புக்காக காத்திருந்தேன். ஆனால் அவரிடமிருந்து அழைப்பு வரவில்லை. பின்னர் நான் மட்டக்களப்பில் உள்ள வைத்தியசாலைக்கு அந்த உதவித்திட்டத்தை ஏற்பாடு செய்து வழங்கி விட்டேன். அவர்கள் தொடர்ந்து அந்த வைத்தியசாலைக்கு தான் இனி செய்வார்கள்.நானும் சுதன் என்ற இளைஞனும் இணைந்து அண்மையில், இந்தியாவில் உள்ள பிரபல தொலைக்காட்சி ஒன்றில் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு யாழ்ப்பாணத்தை சேர்ந்த கில்மிஷா, மலையகத்தை சேர்ந்த அஷானி மற்றும் அந்த நிகழ்ச்சியில் பங்குபற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த பிள்ளைகளுக்கு மில்லியன் கணக்கிலான நிதியை வழங்கியுள்ளோம்.நாங்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான ஏற்பாட்டினை என்னுடன் வந்த சுதன் என்பவரே ஒழுங்கமைத்தார். நாங்கள் இலங்கையில் இருந்து வருகின்றோம் என்று தெரிந்ததும் நடுவர்கள் உட்பட அனைவரும் எழுந்து நின்று எங்களுக்கு மரியாதை செலுத்தினார்கள். அது எமக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது.மலையக சிறுமி அஷானிக்கு அமைச்சர் உட்பட பலர் உதவிகளை செய்வதாக கூறினார்கள். அந்த கிராமத்தையே தத்தெடுப்பதாக ஒருவர் கூறினார். அவர்கள் அனைவரும் உதவி செய்திருந்தால் கோடிக்கணக்கான நிதி அந்த சிறுமிக்கு சேர்ந்திருக்கும். ஆனால் அந்த சிறுமியின் கணக்கினை பரிசீலித்து பார்க்கும் போது அந்தளவுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அந்த சிறுமியின் பெயரை வைத்துக் கொண்டு வேறு சிலர் பயனடைகின்றார்கள்.அண்மையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடாத்தப்படும் இசை நிகழ்ச்சிக்கு நிகரான நிகழ்ச்சி ஒன்றினை யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் நடாத்தவுள்ளேன்.அந்த நிகழ்ச்சியில் அனைத்து வயதுப் பிரிவினரும் கலந்துகொள்ளலாம். இரண்டு சுற்றுக்கள் மூலம் திறமைசாலிகள் தெரிவுசெய்யப்பட்டு இறுதியில் பெறுமதி மிக்க பரிசில்கள் வழங்கப்படும்.உதவி தேவையானவர் என்னிடம் வரலாம். உண்மையில் உதவி தேவையுடைய வர்களுக்கு எந்த நேரமும் உதவி செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement