• May 17 2024

யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒளிவிழா!

Tamil nila / Dec 29th 2022, 10:22 pm
image

Advertisement

யாழ். மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் 2022ஆம் ஆண்டிற்கான ஒளிவிழா, மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் தலைவரும் மாவட்ட செயலக கணக்காளருமான அ.நிர்மல் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (29.12.2022 ) நடைபெற்றது .



நத்தார் தீப ஔியூட்டலுடன் ஆரம்பமான நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.



 இறை வேண்டுதலுக்காக உரும்பிராய் தூய இம்மானுவேல் ஆலய அருட்தந்தை வணக்கத்திற்குரிய எஸ்.ஜனகன் அவர்களும் கிறிஸ்துமஸ் பிறப்புச் செய்தி பற்றிய உரையினை வழங்குவதற்காக பங்குத்தந்தை பரிபாலகர் சாட்டி சித்தாந்தரை மாதா திருத்தலத்தின் அருட்தந்தை வணக்கத்திற்குரிய மிக்கேல் ஜெகன்குமாா் கூஞ்ஞ அவர்களும் வருகை தந்திருந்தனர்.



குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் இயேசு பிரான் பிறப்பு மற்றும் அவர் கூறும் விடயங்களை வாழ்கைக்குரிய பாடத்துடன் இணைத்து மேம்பாடடைய வேண்டும் எனவும் உள்ளங்களில் மன இருளை நீக்கி தீப ஔியை ஏற்றி எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க வேண்டும் என்றும் அன்பு, அமைதி ,சமத்துவம், நீதி போன்ற மனித நேயப் பண்புகளை வளர்த்து மகிழ்ச்சிகரமாக வாழ வேண்டும்.



மேலும் 2023 ஆம் ஆண்டு மகிழ்ச்சியும் சுபீட்சமும் சமாதானமும் நிறைந்த மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமைய அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார் .


குறித்த நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் வரவேற்பு நடனம், கவிதை, பாடல், நாடகம், பேச்சு மற்றும் நடன நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் நத்தாா் தாத்தா வருகையுடன் சிறுவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டு கிறிஸ்மஸ் நத்தார் இசையுடன் விழா சிறப்பாக இனிதே நிறைவுபெற்றது.


மேலும், குறித்த நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒளிவிழா யாழ். மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் 2022ஆம் ஆண்டிற்கான ஒளிவிழா, மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் தலைவரும் மாவட்ட செயலக கணக்காளருமான அ.நிர்மல் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (29.12.2022 ) நடைபெற்றது .நத்தார் தீப ஔியூட்டலுடன் ஆரம்பமான நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். இறை வேண்டுதலுக்காக உரும்பிராய் தூய இம்மானுவேல் ஆலய அருட்தந்தை வணக்கத்திற்குரிய எஸ்.ஜனகன் அவர்களும் கிறிஸ்துமஸ் பிறப்புச் செய்தி பற்றிய உரையினை வழங்குவதற்காக பங்குத்தந்தை பரிபாலகர் சாட்டி சித்தாந்தரை மாதா திருத்தலத்தின் அருட்தந்தை வணக்கத்திற்குரிய மிக்கேல் ஜெகன்குமாா் கூஞ்ஞ அவர்களும் வருகை தந்திருந்தனர்.குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் இயேசு பிரான் பிறப்பு மற்றும் அவர் கூறும் விடயங்களை வாழ்கைக்குரிய பாடத்துடன் இணைத்து மேம்பாடடைய வேண்டும் எனவும் உள்ளங்களில் மன இருளை நீக்கி தீப ஔியை ஏற்றி எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க வேண்டும் என்றும் அன்பு, அமைதி ,சமத்துவம், நீதி போன்ற மனித நேயப் பண்புகளை வளர்த்து மகிழ்ச்சிகரமாக வாழ வேண்டும்.மேலும் 2023 ஆம் ஆண்டு மகிழ்ச்சியும் சுபீட்சமும் சமாதானமும் நிறைந்த மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமைய அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார் .குறித்த நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் வரவேற்பு நடனம், கவிதை, பாடல், நாடகம், பேச்சு மற்றும் நடன நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் நத்தாா் தாத்தா வருகையுடன் சிறுவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டு கிறிஸ்மஸ் நத்தார் இசையுடன் விழா சிறப்பாக இனிதே நிறைவுபெற்றது.மேலும், குறித்த நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement