• May 03 2024

யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு..! samugammedia

Chithra / Oct 27th 2023, 1:34 pm
image

Advertisement


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

விபத்துக்கள், சத்திரசிகிச்சைகள், குருதிச்சோகை நோயாளர்கள், புற்றுநோயாளர்கள் மற்றும் குருதி தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வைத்தியசாலையில் அதிகரித்து செல்கின்றதனால் இரத்த வங்கியால் விநியோகிக்கப்படு கின்ற குருதியின் அளவும் கூடிக் கொண்டே செல்கின்றதாக இரத்த வங்கியினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் தெரிவிக்கையில்,

இந்த குருதி தேவை அதிகரிப்பிற்கு ஏற்ப குருதிக் கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இதனால் இரத்த வங்கியில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

நாம் பல இடங்களுக்குச் சென்று குருதியை சேகரித்தாலும் குறிப்பிட்ட சில காலங்களில் குருதியின் கையிருப்பு குறைந்தளவிலேயே காணப்படுகின்றது.


எமது இரத்த வங்கியில் 330 பைந்த் குருதி குறையாமல் இருக்க வேண்டும். அனால் தற்போது இருக்கும் குருதியின் அளவு 238 பைந்த் ஆகும். இது ஆபத்தான நிலையாகும்.

இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை எம்மால் வழங்க முடியாமலுள்ளது. ஒரு அனர்த்தம் நிகழுமாயின் அதனால் ஏற்படும் குருதியிழப்பை ஈடுசெய்வதற்கு எம்மால் முடியாமல் போகலாம். 

ஆகவே இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு பொது மக்கள் இரத்ததானம் செய்வதற்கு முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள 0772105375 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் – என்றனர்.

யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு. samugammedia யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.விபத்துக்கள், சத்திரசிகிச்சைகள், குருதிச்சோகை நோயாளர்கள், புற்றுநோயாளர்கள் மற்றும் குருதி தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வைத்தியசாலையில் அதிகரித்து செல்கின்றதனால் இரத்த வங்கியால் விநியோகிக்கப்படு கின்ற குருதியின் அளவும் கூடிக் கொண்டே செல்கின்றதாக இரத்த வங்கியினர் தெரிவிக்கின்றனர்.மேலும் தெரிவிக்கையில்,இந்த குருதி தேவை அதிகரிப்பிற்கு ஏற்ப குருதிக் கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இதனால் இரத்த வங்கியில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாம் பல இடங்களுக்குச் சென்று குருதியை சேகரித்தாலும் குறிப்பிட்ட சில காலங்களில் குருதியின் கையிருப்பு குறைந்தளவிலேயே காணப்படுகின்றது.எமது இரத்த வங்கியில் 330 பைந்த் குருதி குறையாமல் இருக்க வேண்டும். அனால் தற்போது இருக்கும் குருதியின் அளவு 238 பைந்த் ஆகும். இது ஆபத்தான நிலையாகும்.இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை எம்மால் வழங்க முடியாமலுள்ளது. ஒரு அனர்த்தம் நிகழுமாயின் அதனால் ஏற்படும் குருதியிழப்பை ஈடுசெய்வதற்கு எம்மால் முடியாமல் போகலாம். ஆகவே இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு பொது மக்கள் இரத்ததானம் செய்வதற்கு முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றோம். மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள 0772105375 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் – என்றனர்.

Advertisement

Advertisement

Advertisement