• May 17 2024

யாழ். பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று! - வீதிப் போக்குவரத்தில் மாற்றம் samugammedia

Chithra / Jul 19th 2023, 8:19 am
image

Advertisement

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாம் பாகம், இன்று ஆரம்பமாகி நாளை மறுதினம் வரை நடைபெறவுள்ளது.

பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில், எட்டு அமர்வுகளாக இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர், வாழ்நாள் பேராசிரியர் சி.பத்மநாதன், இந்த விழாவிற்கு தலைமை தாங்கி, பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கவுள்ளார்.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் 162 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 1885 உள்வாரி மாணவர்களுக்கும், 166 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட உள்ளதுடன், 65 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு 50ஆவது வருடத்தில் நடைபெறவுள்ள பொன்விழா நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வாக இந்தப் பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொதுப்பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு, வீதிப் போக்குவரத்தை ஒருவழிப் பாதையாக மாற்றுவது தொடர்பாக நல்லூர் பிரதேச சபை அறிவித்துள்ளது.

இன்று முதல் நாளை மறுதினம் வரையில், காலை 8 மணி தொடக்கம் மாலை 6மணி வரை திருநெல்வேலி சந்தியிலிருந்து கொக்குவில் சந்தியை நோக்கிய ஆடியபாதம் வீதியின் தொடருந்து கடவை வரையான பாதை மற்றும் கலட்டிச் சந்தியிலிருந்து இராமநாதன் வீதி பரமேஸ்வராச் சந்தி வரையான பாதை ஆகியன ஒருவழிப்பாதையாகப் பேணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


யாழ். பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று - வீதிப் போக்குவரத்தில் மாற்றம் samugammedia யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாம் பாகம், இன்று ஆரம்பமாகி நாளை மறுதினம் வரை நடைபெறவுள்ளது.பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில், எட்டு அமர்வுகளாக இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர், வாழ்நாள் பேராசிரியர் சி.பத்மநாதன், இந்த விழாவிற்கு தலைமை தாங்கி, பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கவுள்ளார்.இந்தப் பட்டமளிப்பு விழாவில் 162 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 1885 உள்வாரி மாணவர்களுக்கும், 166 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட உள்ளதுடன், 65 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு 50ஆவது வருடத்தில் நடைபெறவுள்ள பொன்விழா நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வாக இந்தப் பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது.இதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொதுப்பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு, வீதிப் போக்குவரத்தை ஒருவழிப் பாதையாக மாற்றுவது தொடர்பாக நல்லூர் பிரதேச சபை அறிவித்துள்ளது.இன்று முதல் நாளை மறுதினம் வரையில், காலை 8 மணி தொடக்கம் மாலை 6மணி வரை திருநெல்வேலி சந்தியிலிருந்து கொக்குவில் சந்தியை நோக்கிய ஆடியபாதம் வீதியின் தொடருந்து கடவை வரையான பாதை மற்றும் கலட்டிச் சந்தியிலிருந்து இராமநாதன் வீதி பரமேஸ்வராச் சந்தி வரையான பாதை ஆகியன ஒருவழிப்பாதையாகப் பேணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement