ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் நிதி அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வாவே நியமிக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
முன்னதாக ஹர்ச டி சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
இதன்போது நிதியமைச்சராக இருந்த மங்கள சமரவீரவின் திட்டங்களுக்கு ஹர்ச டி சில்வா பெரிதும் துணையாக செயற்பட்டுள்ளார்
மேலும், இந்தியாவின் உதவியுடன் உயிர்காக்கும் சுவ செரிய நோயாளர் காவு வண்டி சேவையை 2016இல் உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஹர்ச டி சில்வாவே நிதியமைச்சர். சஜித் அறிவிப்பு ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் நிதி அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வாவே நியமிக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.முன்னதாக ஹர்ச டி சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவி வகித்துள்ளார்.இதன்போது நிதியமைச்சராக இருந்த மங்கள சமரவீரவின் திட்டங்களுக்கு ஹர்ச டி சில்வா பெரிதும் துணையாக செயற்பட்டுள்ளார்மேலும், இந்தியாவின் உதவியுடன் உயிர்காக்கும் சுவ செரிய நோயாளர் காவு வண்டி சேவையை 2016இல் உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.