• Oct 18 2024

தயாசிறி கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரா..? – மைத்திரியின் கருத்தால் குழப்பம் samugammedia

Chithra / Sep 6th 2023, 1:04 pm
image

Advertisement

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுசெயலாளர் தயாசிறி ஜயசேகரவை கட்சியில் இருந்து நீக்கவில்லை என்றும் கட்சியில் அவரின் அங்கத்துவத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாகவும் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

என்னை தலைவர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக இன்று வழக்கு ஒன்று இருக்கின்றது.

அதேபோன்று பல சிக்கல்கள் இருக்கின்றன அவை குறித்து வெளிப்படையாக கூறுவதற்கு தற்போது நான் விரும்பவில்லை.

பொதுசெயலாளர் பதவி இன்றி வேறு எந்த பதவிக்கு என்றாலும் அவரை கட்சியில் சேர்த்துக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

கட்சியில் அவருடைய அங்கத்துவமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அவர் எங்களுடன் உடன்பாடுகளுக்கு வந்து ஒத்துழைப்பாராயின் அவர் மீண்டும் இணைந்துக்கொள்ள முடியும்.

தயாசிறி கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரா. – மைத்திரியின் கருத்தால் குழப்பம் samugammedia ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுசெயலாளர் தயாசிறி ஜயசேகரவை கட்சியில் இருந்து நீக்கவில்லை என்றும் கட்சியில் அவரின் அங்கத்துவத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாகவும் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,என்னை தலைவர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக இன்று வழக்கு ஒன்று இருக்கின்றது.அதேபோன்று பல சிக்கல்கள் இருக்கின்றன அவை குறித்து வெளிப்படையாக கூறுவதற்கு தற்போது நான் விரும்பவில்லை.பொதுசெயலாளர் பதவி இன்றி வேறு எந்த பதவிக்கு என்றாலும் அவரை கட்சியில் சேர்த்துக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம்.கட்சியில் அவருடைய அங்கத்துவமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அவர் எங்களுடன் உடன்பாடுகளுக்கு வந்து ஒத்துழைப்பாராயின் அவர் மீண்டும் இணைந்துக்கொள்ள முடியும்.

Advertisement

Advertisement

Advertisement