ஊழலுக்கு எதிராக செயற்பட்டமைக்காகவே தாம் அமைச்சு பதவியை இழந்துள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தீர்மானங்கள் மேற்கொள்ளும் போது தாம் விரைவாக செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தம்மீதான உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் பத்தரமுல்லையில் உள்ள பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரசபையில் நேற்று அவர் முறைப்பாடளித்துள்ளார்.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கிரிக்கெட் தொடர்பில் பாரிய சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் நீதிமன்றத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி வரை காலஅவகாசம் கோரியுள்ளமைக்கான காரணம் தெளிவாகவில்லை எனவும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக செயற்பட்டதாலேயே அமைச்சு பதவி பறிக்கப்பட்டது. - ரொஷான் அதிரடிக் கருத்து ஊழலுக்கு எதிராக செயற்பட்டமைக்காகவே தாம் அமைச்சு பதவியை இழந்துள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.தீர்மானங்கள் மேற்கொள்ளும் போது தாம் விரைவாக செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தம்மீதான உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் பத்தரமுல்லையில் உள்ள பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரசபையில் நேற்று அவர் முறைப்பாடளித்துள்ளார்.இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் கிரிக்கெட் தொடர்பில் பாரிய சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் நீதிமன்றத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி வரை காலஅவகாசம் கோரியுள்ளமைக்கான காரணம் தெளிவாகவில்லை எனவும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.