• Sep 08 2024

தெல்லிப்பழையில் வாள்வெட்டில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் வானுடன் கைது...! பொலிஸார் அதிரடி...!samugammedia

Sharmi / Dec 6th 2023, 8:45 am
image

Advertisement

யாழ் தெல்லிப்பழையில் நேற்று முன்தினம்(04)  இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய வான் மற்றும் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் மாலை ஐந்து முப்பது மணி அளவில் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வான் ஒன்றில் வந்த கும்பல் ஒன்றினால் வாள்வெட்டு சம்பவம் ஒன்று நடாத்தப்பட்ட நிலையில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட போதிலும் குறித்த  வான்  தப்பிச் சென்றது.

இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டதோடு யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதலில் முல்லைத்தீவு பகுதியில் வைத்து குறித்த கும்பலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.



தெல்லிப்பழையில் வாள்வெட்டில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் வானுடன் கைது. பொலிஸார் அதிரடி.samugammedia யாழ் தெல்லிப்பழையில் நேற்று முன்தினம்(04)  இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய வான் மற்றும் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்தார்.நேற்று முன்தினம் மாலை ஐந்து முப்பது மணி அளவில் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வான் ஒன்றில் வந்த கும்பல் ஒன்றினால் வாள்வெட்டு சம்பவம் ஒன்று நடாத்தப்பட்ட நிலையில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட போதிலும் குறித்த  வான்  தப்பிச் சென்றது.இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டதோடு யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதலில் முல்லைத்தீவு பகுதியில் வைத்து குறித்த கும்பலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement