• Apr 02 2025

நாயை காப்பாற்ற முயன்றபோது ஏற்பட்ட துயரம்..! யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி பெண் பலி..!

Chithra / Dec 6th 2023, 8:48 am
image


 

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த விரைவு ரயிலில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் வெல்லவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதே பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ரயில் தண்டவாளத்திற்கு வந்த பெண் வீட்டில் வளர்த்து வந்த நாயை காப்பாற்ற முயன்ற போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெல்லவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாயை காப்பாற்ற முயன்றபோது ஏற்பட்ட துயரம். யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி பெண் பலி.  யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த விரைவு ரயிலில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் வெல்லவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.அதே பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.ரயில் தண்டவாளத்திற்கு வந்த பெண் வீட்டில் வளர்த்து வந்த நாயை காப்பாற்ற முயன்ற போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெல்லவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement