• Feb 11 2025

சுகாதார சீர்கேடு; பல்கலை சிற்றுண்டிசாலைக்கு 20 ஆயிரம் தண்டம்..!

Sharmi / Feb 11th 2025, 11:34 am
image

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க தவறிய தென்கிழக்கு பல்கலைக்கழக சிற்றுண்டி சாலையொன்றுக்கு 20 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள சிற்றுண்டி சாலை சுகாதார முறையில் காணப்படவில்லை என சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.

குறித்த முறைப்பாடுக்கு அமைய நேற்றையதினம்(10) சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் தலைமையிலான குழுவினரினால் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க தவறிய குறித்த சிற்றுண்டிசாலை உரிமையாளருக்கு எதிராக  சுகாதார வைத்திய அதிகாரிகளினால் வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியவேளை 20 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் எச்சரிக்கையையும் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



சுகாதார சீர்கேடு; பல்கலை சிற்றுண்டிசாலைக்கு 20 ஆயிரம் தண்டம். சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க தவறிய தென்கிழக்கு பல்கலைக்கழக சிற்றுண்டி சாலையொன்றுக்கு 20 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள சிற்றுண்டி சாலை சுகாதார முறையில் காணப்படவில்லை என சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.குறித்த முறைப்பாடுக்கு அமைய நேற்றையதினம்(10) சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் தலைமையிலான குழுவினரினால் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.இதன் போது சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க தவறிய குறித்த சிற்றுண்டிசாலை உரிமையாளருக்கு எதிராக  சுகாதார வைத்திய அதிகாரிகளினால் வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியவேளை 20 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் எச்சரிக்கையையும் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement