• Nov 28 2024

பணிப்பகிஷ்கரிப்பை தொடர்வதற்கு சுகாதாரத்துறை தொழிற்சங்கள் தீர்மானம்..!!

Tamil nila / Jan 16th 2024, 8:04 pm
image

அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க சுகாதாரத்துறை தொழிற்சங்கள் கூட்டாக தீர்மானித்துள்ளன.

இன்று (16) காலை முதல் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோருடன் தமது கோரிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய தொழிற்சங்க பிரதிநிதிகள், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் நாளை (17) காலை 6.30 மணி வரை பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.

வைத்தியர்கள் நீங்கலாக 72 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் இன்று காலை 06.30 மணிக்கு 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

வைத்தியர்களுக்கான சேவைக்கால இடையூறு, வருகை மற்றும் போக்குவரத்து கொடுப்பனவு எனப்படும் DAT கொடுப்பனவை 35,000 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அண்மையில் அமைச்சரவைக்கு அறிவித்திருந்தார்.

இந்த தீர்மானத்திற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், குறித்த கொடுப்பனவு தமக்கும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பல சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பணிப்பகிஷ்கரிப்பை தொடர்வதற்கு சுகாதாரத்துறை தொழிற்சங்கள் தீர்மானம். அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க சுகாதாரத்துறை தொழிற்சங்கள் கூட்டாக தீர்மானித்துள்ளன.இன்று (16) காலை முதல் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோருடன் தமது கோரிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டனர்.இந்த சந்திப்புக்கு பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய தொழிற்சங்க பிரதிநிதிகள், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் நாளை (17) காலை 6.30 மணி வரை பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.வைத்தியர்கள் நீங்கலாக 72 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் இன்று காலை 06.30 மணிக்கு 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.வைத்தியர்களுக்கான சேவைக்கால இடையூறு, வருகை மற்றும் போக்குவரத்து கொடுப்பனவு எனப்படும் DAT கொடுப்பனவை 35,000 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அண்மையில் அமைச்சரவைக்கு அறிவித்திருந்தார்.இந்த தீர்மானத்திற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், குறித்த கொடுப்பனவு தமக்கும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பல சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement