72 சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு இன்றைய தினம் (15) காலை 06.30 மணி முதல் முடிவுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35000 ரூபா கொடுப்பனவு தமக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முவைத்து 72 சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னர் பணி புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டன.
பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு வழங்கப்படுவதாக உறுதியளித்ததை தொடர்ந்து குறித்த நடவடிக்கையை அவர்கள் கைவிட்டனர். இதையடுத்து நிதி அமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததன் காரணமாக கடந்த 13 ஆம் திகதி மீண்டும் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.
அன்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதும் தீர்மானம் எட்டப்படாத நிலையில், தமக்கான தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக தெரிவித்து நேற்றைய தினமும் (14) குறித்த 72 தொழிற்சங்கங்களும் தொடர்ச்சியான வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டன. இதையடுத்து, வருகிற திங்கட்கிழமை அதாவது 19 ஆம் திகதி சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இதன்படி, தமது கொடுப்பனவுகளில் உள்ள முரண்பாடுகள் தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பை இன்றைய தினம் (15) காலை 06.30 மணி முதல் முடிவுக்குக் கொண்டு வருவதற்கு 72 சுகாதார தொழிற்சங்கங்களும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றுடன் நிறைவுக்கு வரும் சுகாதாரப் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு.samugammedia 72 சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு இன்றைய தினம் (15) காலை 06.30 மணி முதல் முடிவுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35000 ரூபா கொடுப்பனவு தமக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முவைத்து 72 சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னர் பணி புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டன. பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு வழங்கப்படுவதாக உறுதியளித்ததை தொடர்ந்து குறித்த நடவடிக்கையை அவர்கள் கைவிட்டனர். இதையடுத்து நிதி அமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததன் காரணமாக கடந்த 13 ஆம் திகதி மீண்டும் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்தனர். அன்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதும் தீர்மானம் எட்டப்படாத நிலையில், தமக்கான தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக தெரிவித்து நேற்றைய தினமும் (14) குறித்த 72 தொழிற்சங்கங்களும் தொடர்ச்சியான வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டன. இதையடுத்து, வருகிற திங்கட்கிழமை அதாவது 19 ஆம் திகதி சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.இதன்படி, தமது கொடுப்பனவுகளில் உள்ள முரண்பாடுகள் தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பை இன்றைய தினம் (15) காலை 06.30 மணி முதல் முடிவுக்குக் கொண்டு வருவதற்கு 72 சுகாதார தொழிற்சங்கங்களும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.