2025 வரவு செலவு திட்டத்தில் கோரிக்கை நிறைவேற்றப்படாமையால் 19 சுகாதார தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று(18) அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றது.
அந்த வகையில், இதற்கு ஆதரவு வழங்கும் வகையில் மூதூர் வைத்திய அதிகாரி பணிமனையில் கடமையாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார மருத்துவமாதுக்கள் இன்று அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன் காரணமாக மூதூர் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொதுச்சுகாதார மருத்துவமாது அலுவலகங்கள் மூடப்பட்டு காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.
தொழிற் சங்கங்கள் அரசியல் பின்புலத்தில் தொழில்சங்க வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுப்பதால் சாதாரண பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர்.
சுகாதார சேவை பெறுவதற்கு கஷ்டங்களுக்கு மத்தியில் வந்தாலும் சேவை பெறாது திரும்பிச் செல்ல வேண்டியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மூதூரில் சுகாதார சேவையினர் வேலைநிறுத்தம். 2025 வரவு செலவு திட்டத்தில் கோரிக்கை நிறைவேற்றப்படாமையால் 19 சுகாதார தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று(18) அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றது.அந்த வகையில், இதற்கு ஆதரவு வழங்கும் வகையில் மூதூர் வைத்திய அதிகாரி பணிமனையில் கடமையாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார மருத்துவமாதுக்கள் இன்று அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.இதன் காரணமாக மூதூர் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொதுச்சுகாதார மருத்துவமாது அலுவலகங்கள் மூடப்பட்டு காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.தொழிற் சங்கங்கள் அரசியல் பின்புலத்தில் தொழில்சங்க வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுப்பதால் சாதாரண பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர்.சுகாதார சேவை பெறுவதற்கு கஷ்டங்களுக்கு மத்தியில் வந்தாலும் சேவை பெறாது திரும்பிச் செல்ல வேண்டியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.