• May 17 2024

அதிக பனிமூட்டம்...!50 அடி பள்ளத்தில் வீழ்ந்து பாரஊர்தி விபத்து...!samugammedia

Sharmi / Oct 6th 2023, 4:05 pm
image

Advertisement

மத்திய மலைநாட்டில் அதிக பனிமூட்டம் காரணமாக நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா  பதுளை பிரதான வீதியில் பார ஊர்தி ஒன்று விபத்திற்குள்ளாரகியுள்ளது.

இவ்வாறு விபத்துக்குள்ளான பார ஊர்தியில் சாரதி காயமடைந்துள்ளார்.

நுவரெலியாவிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பார ஊர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

விபத்தின்போது பார ஊர்தியின் சாரதி மற்றும் அவரின் உதவியாளர் இருந்ததாகவும் சாரதி மாத்திரம் காயமடைந்த நிலையில் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வீதியில் உள்ள வளைவு ஒன்றில் செங்குத்தான பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி பார ஊர்தி  கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலியையும் தகரத்துக்கொண்டு சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக நுவரெலியா போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு அங்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் பல வீதித்தடைகளை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிக பனிமூட்டம்.50 அடி பள்ளத்தில் வீழ்ந்து பாரஊர்தி விபத்து.samugammedia மத்திய மலைநாட்டில் அதிக பனிமூட்டம் காரணமாக நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா  பதுளை பிரதான வீதியில் பார ஊர்தி ஒன்று விபத்திற்குள்ளாரகியுள்ளது.இவ்வாறு விபத்துக்குள்ளான பார ஊர்தியில் சாரதி காயமடைந்துள்ளார்.நுவரெலியாவிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பார ஊர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.விபத்தின்போது பார ஊர்தியின் சாரதி மற்றும் அவரின் உதவியாளர் இருந்ததாகவும் சாரதி மாத்திரம் காயமடைந்த நிலையில் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த வீதியில் உள்ள வளைவு ஒன்றில் செங்குத்தான பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி பார ஊர்தி  கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலியையும் தகரத்துக்கொண்டு சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக நுவரெலியா போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.குறித்த பகுதியில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு அங்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் பல வீதித்தடைகளை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement