• Jan 26 2025

நாட்டில் பெய்துவரும் கனமழை; நான்கு வான்கதவுகள் திறப்பு!

Chithra / Jan 12th 2025, 9:39 am
image

 

நாட்டின் சில பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக  நான்கு வான்கதவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளது.

உல்ஹிட்டிய ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகளே இன்று காலை திறக்கப்பட்டதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான அதிகாரி தீப்தா ஜயசேகர தெரிவித்தார்.

ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நீர்வரத்து உயர் மட்டத்தை தாண்டியுள்ளது. 

அதனை தேவையான மட்டத்தில் பேணுமாறு குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் பணிப்புரைக்கு அமைய வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் பொறுப்பதிகாரி தீப்தா ஜயசேகர தெரிவித்தார்.

அடுத்த சில மணித்தியாலங்களில் பெய்யும் மழையின் அளவை பொறுத்தே வான்தவுகளை திறப்பதில் மாற்றம் ஏற்படலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் பெய்துவரும் கனமழை; நான்கு வான்கதவுகள் திறப்பு  நாட்டின் சில பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக  நான்கு வான்கதவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளது.உல்ஹிட்டிய ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகளே இன்று காலை திறக்கப்பட்டதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான அதிகாரி தீப்தா ஜயசேகர தெரிவித்தார்.ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நீர்வரத்து உயர் மட்டத்தை தாண்டியுள்ளது. அதனை தேவையான மட்டத்தில் பேணுமாறு குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் பணிப்புரைக்கு அமைய வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் பொறுப்பதிகாரி தீப்தா ஜயசேகர தெரிவித்தார்.அடுத்த சில மணித்தியாலங்களில் பெய்யும் மழையின் அளவை பொறுத்தே வான்தவுகளை திறப்பதில் மாற்றம் ஏற்படலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement