• Apr 30 2025

பூந்தோட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தேர்தல் அலுவலகம் திறப்பு!

Thansita / Apr 29th 2025, 7:34 pm
image

இலங்கை தமிழரசுக்கட்சியின் தேர்தல்காரியாலயம் திறப்பும் தேர்தல் கலந்துரையாடல் நிகழ்வும் வவுனியா பூந்தோட்டத்தில் இன்று இடம்பெற்றது.  

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத்தேர்தலுக்கான பிரச்சாரபணிகள் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. 

அந்தவகையில் வவுனியா மாநகரசபைக்குட்பட்ட குடியிருப்பு வட்டாரத்தில் தமிழரசுக்கட்சி சார்பாக ந.கருணாநிதி நேரடிவேட்பாளராக போட்டியிடுவதுடன் சு.சந்திரசேகரன் பட்டியல் வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர்.  

அவர்களது பிரதேசதேர்தல் அலுவலகம் பூந்தோட்டம் பகுதியில் இன்று மாலை திறந்துவைக்கப்பட்டது.  

கட்சியின் மூத்த உறுப்பினர் க.வேலாயுதப்பிள்ளை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்,கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.


பூந்தோட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தேர்தல் அலுவலகம் திறப்பு இலங்கை தமிழரசுக்கட்சியின் தேர்தல்காரியாலயம் திறப்பும் தேர்தல் கலந்துரையாடல் நிகழ்வும் வவுனியா பூந்தோட்டத்தில் இன்று இடம்பெற்றது.  எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத்தேர்தலுக்கான பிரச்சாரபணிகள் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அந்தவகையில் வவுனியா மாநகரசபைக்குட்பட்ட குடியிருப்பு வட்டாரத்தில் தமிழரசுக்கட்சி சார்பாக ந.கருணாநிதி நேரடிவேட்பாளராக போட்டியிடுவதுடன் சு.சந்திரசேகரன் பட்டியல் வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர்.  அவர்களது பிரதேசதேர்தல் அலுவலகம் பூந்தோட்டம் பகுதியில் இன்று மாலை திறந்துவைக்கப்பட்டது.  கட்சியின் மூத்த உறுப்பினர் க.வேலாயுதப்பிள்ளை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்,கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement