• Nov 23 2024

இலங்கையின் பல பகுதிகளில் காற்றுடன், பலத்த மழை!

Tamil nila / Jul 6th 2024, 7:37 am
image

இலங்கையின் சில பகுதிகளில் இன்று (06) மழையுடனான வானிலை பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 50 மில்லிமீற்றருக்கும் மேல் பலத்த மழை பெய்யக்கூடும்.

மேலும் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.

அத்துடன் மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஆகவே பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இலங்கையின் பல பகுதிகளில் காற்றுடன், பலத்த மழை இலங்கையின் சில பகுதிகளில் இன்று (06) மழையுடனான வானிலை பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதன்படி மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 50 மில்லிமீற்றருக்கும் மேல் பலத்த மழை பெய்யக்கூடும்.மேலும் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.அத்துடன் மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.ஆகவே பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement