• Feb 22 2025

வடக்கு கிழக்கில் நாளை மறுதினம் முதல் தொடர் மழை -பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Thansita / Feb 22nd 2025, 10:39 am
image

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் நாளை மறுதினம் முதல் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அந்த வகையில் 

 காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  

நாட்டின் ஏனைய பிரதேசங்களில்  வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். என்பதால் பொதுமக்கள்  மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள் 

வடக்கு கிழக்கில் நாளை மறுதினம் முதல் தொடர் மழை -பொதுமக்களுக்கு எச்சரிக்கை வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் நாளை மறுதினம் முதல் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அந்த வகையில்  காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  நாட்டின் ஏனைய பிரதேசங்களில்  வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். என்பதால் பொதுமக்கள்  மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள் 

Advertisement

Advertisement

Advertisement