தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக, திருகோணமலை - கிண்ணியா பிரதேசத்தில் அமைந்துள்ள காளிபாஞ்சான் ஆறு பெருக்கடுத்துள்ளதால், சூரங்கல் மற்றும் வன்னியனார்மடு ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
வேளாண்மை செய்கை பண்ணப்பட்டு 21 நாட்களே கடந்த நிலையில், வயல் காணிகளை வெள்ள நீர் மூடியுள்ளது.
மூன்று நாட்களுக்கு மேலாக இந்த வெள்ளம் சிறு பயிரை மூடியிருப்பதால், இந்த வயல் நிலங்களை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
வெள்ளம் வடிந்தோடிய பிறகு, இந்த நிலங்களில் மீண்டும் புதிதாக விதைக்க வேண்டும். நாங்கள் கடன்பட்டு, அடகு வைத்து இந்த வேளாண்மையை செய்தோம்.
மீண்டும் செய்வதென்றால் எங்கே போவது? அரசாங்கமே எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை இருக்கின்றனர்.
கனமழையால் கிண்ணியாவில் சுமார் 800 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்பு கவலையில் விவசாயிகள் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக, திருகோணமலை - கிண்ணியா பிரதேசத்தில் அமைந்துள்ள காளிபாஞ்சான் ஆறு பெருக்கடுத்துள்ளதால், சூரங்கல் மற்றும் வன்னியனார்மடு ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.வேளாண்மை செய்கை பண்ணப்பட்டு 21 நாட்களே கடந்த நிலையில், வயல் காணிகளை வெள்ள நீர் மூடியுள்ளது. மூன்று நாட்களுக்கு மேலாக இந்த வெள்ளம் சிறு பயிரை மூடியிருப்பதால், இந்த வயல் நிலங்களை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.வெள்ளம் வடிந்தோடிய பிறகு, இந்த நிலங்களில் மீண்டும் புதிதாக விதைக்க வேண்டும். நாங்கள் கடன்பட்டு, அடகு வைத்து இந்த வேளாண்மையை செய்தோம். மீண்டும் செய்வதென்றால் எங்கே போவது அரசாங்கமே எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை இருக்கின்றனர்.