• Nov 26 2024

கனமழை, வெள்ளத்தால் மூழ்கிய சென்னை- சாலையில் சென்ற முதலையால் மக்கள் அச்சம்! samugammedia

Tamil nila / Dec 4th 2023, 11:39 pm
image

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பல இடங்களில் 20 செ.மீ மேல் மழை பதிவாகியுள்ளது. 

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி சென்னை பெருங்குடியில் அதிகபட்சமாக 29 செ.மீ மழை பெய்துள்ளது. 

அதாவது ஆவடி-28 செ.மீ, அடையாறு - 23.5 செ.மீ மழை, மீனம்பாக்கம் 23 செமீ, கோடம்பாக்கம் 21.8 செ.மீ மழை, சோழிங்கநல்லூர் - 21.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னை சென்ட்ரல் முதல் கோயம்பேடு வரையிலான சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

இதற்கிடையில் இன்று  பிற்பகல் 1 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 100 கி.மீ தொலைவில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது. இது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து தெற்கு ஆந்திரா நோக்கிச் செல்லும். புயல் காரணமாக சென்னையில் இன்று இரவு வரை மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான சாலைகளில் நீர் தேங்கியிருப்பதால், சென்னையின் முக்கிய சுரங்கப் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கிறன.

மிக்ஜாம் புயல் நாளை (டிசம்பர் 5) முற்பகல் தெற்கு ஆந்திர மாநிலத்தின் கடற்கரையை, நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாகக் கடக்கக்கூடும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை பெருங்களத்தூரில் சாலையில் முதலை நடந்து சென்ற வீடியோ வெளியான நிலையில் அருகில் உள்ள நீர்நிலைகளுக்குள் மக்கள் இறங்க வேண்டாம் என்று வனத்துறை அலுவலர் கூறியுள்ளார். அந்தப் பகுதிக்கு வனத்துறை ஊழியர்கள் அனுப்பப்பட்டு முதலை தென்பட்டால் அது மீட்கப்பட்டு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிக்ஜாம் புயல் நாளை தெற்கு ஆந்திராவில் கரையை கடக்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.


கனமழை, வெள்ளத்தால் மூழ்கிய சென்னை- சாலையில் சென்ற முதலையால் மக்கள் அச்சம் samugammedia சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பல இடங்களில் 20 செ.மீ மேல் மழை பதிவாகியுள்ளது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி சென்னை பெருங்குடியில் அதிகபட்சமாக 29 செ.மீ மழை பெய்துள்ளது. அதாவது ஆவடி-28 செ.மீ, அடையாறு - 23.5 செ.மீ மழை, மீனம்பாக்கம் 23 செமீ, கோடம்பாக்கம் 21.8 செ.மீ மழை, சோழிங்கநல்லூர் - 21.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னை சென்ட்ரல் முதல் கோயம்பேடு வரையிலான சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.இதற்கிடையில் இன்று  பிற்பகல் 1 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 100 கி.மீ தொலைவில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது. இது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து தெற்கு ஆந்திரா நோக்கிச் செல்லும். புயல் காரணமாக சென்னையில் இன்று இரவு வரை மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பெரும்பாலான சாலைகளில் நீர் தேங்கியிருப்பதால், சென்னையின் முக்கிய சுரங்கப் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கிறன.மிக்ஜாம் புயல் நாளை (டிசம்பர் 5) முற்பகல் தெற்கு ஆந்திர மாநிலத்தின் கடற்கரையை, நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாகக் கடக்கக்கூடும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை பெருங்களத்தூரில் சாலையில் முதலை நடந்து சென்ற வீடியோ வெளியான நிலையில் அருகில் உள்ள நீர்நிலைகளுக்குள் மக்கள் இறங்க வேண்டாம் என்று வனத்துறை அலுவலர் கூறியுள்ளார். அந்தப் பகுதிக்கு வனத்துறை ஊழியர்கள் அனுப்பப்பட்டு முதலை தென்பட்டால் அது மீட்கப்பட்டு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.மிக்ஜாம் புயல் நாளை தெற்கு ஆந்திராவில் கரையை கடக்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement