நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்றகாலநிலை காரணமாக பலத்த மழை மற்றும் வெள்ளத்தினால் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 7 அயிரத்துமு 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய 2271 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருகின்றது
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தாழ்நிலப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சில பகுதிகளில் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இதேவேளை இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, ஆகிய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் மேற்பட்ட மழைவீழ்ச்சி பதிவாகும் என திணைக்களம் விடுத்துள்ள வானிலை முன்னறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த மழை - இதுவரையில் சுமார் 7000 பேர் பாதிப்பு - இன்றும் கன மழைக்கு சாத்தியம். Samugammedia நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்றகாலநிலை காரணமாக பலத்த மழை மற்றும் வெள்ளத்தினால் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 7 அயிரத்துமு 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய 2271 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருகின்றதுஇதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.தாழ்நிலப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சில பகுதிகளில் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.இதேவேளை இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, ஆகிய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் மேற்பட்ட மழைவீழ்ச்சி பதிவாகும் என திணைக்களம் விடுத்துள்ள வானிலை முன்னறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.