• Apr 28 2026

வானைப்பிளந்து கொட்டி தீர்த்த கனமழை-வெள்ளத்தில் மிதக்கும் சீனா!

Ziya / Apr 28th 2026, 9:45 am
image


சீனாவின் தெற்குப் பகுதியான குவாங்சி (Guangxi) மாகாணத்தில் உள்ள கின்சோ (Qinzhou) நகரில்  நேற்று வரலாறு காணாத கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 


வெறும் 8 மணி நேர இடைவெளியில் பதிவான மழையின் அளவு, ஒட்டுமொத்தப் பிராந்தியத்தையும் நிலைகுலையச் செய்துள்ளது.


8 மணி நேரத்தில் 273 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது ஒரு கடுமையான புயலின் போது பெய்யும் சாதாரண மழை அளவை விட மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒரு மணி நேரத்தில் மட்டும் 160 மி.மீ மழை பெய்து மிரட்டியுள்ளது. 


ஏப்ரல் மாதத்தில் இப்பகுதியில் பெய்த முந்தைய அனைத்து மழைப்பொழிவு சாதனைகளும்  முறியடிக்கப்பட்டுள்ளன.


கின்சோ நகரத்தின் முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 


வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


கடும் வெள்ளம் காரணமாகத் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன.


வானைப்பிளந்து கொட்டி தீர்த்த கனமழை-வெள்ளத்தில் மிதக்கும் சீனா சீனாவின் தெற்குப் பகுதியான குவாங்சி (Guangxi) மாகாணத்தில் உள்ள கின்சோ (Qinzhou) நகரில்  நேற்று வரலாறு காணாத கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெறும் 8 மணி நேர இடைவெளியில் பதிவான மழையின் அளவு, ஒட்டுமொத்தப் பிராந்தியத்தையும் நிலைகுலையச் செய்துள்ளது.8 மணி நேரத்தில் 273 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது ஒரு கடுமையான புயலின் போது பெய்யும் சாதாரண மழை அளவை விட மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு மணி நேரத்தில் மட்டும் 160 மி.மீ மழை பெய்து மிரட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் இப்பகுதியில் பெய்த முந்தைய அனைத்து மழைப்பொழிவு சாதனைகளும்  முறியடிக்கப்பட்டுள்ளன.கின்சோ நகரத்தின் முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.கடும் வெள்ளம் காரணமாகத் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement