• Oct 06 2024

கொழும்பில் நான்காவது நாளாக தொடரும் உச்சக்கட்ட பாதுகாப்பு - விரைவில் முக்கிய தீர்மானம் samugammedia

Chithra / May 15th 2023, 9:58 am
image

Advertisement

ஆட்சி கவிழ்ப்பு சதி நடவடிக்கை தொடர்பான புலனாய்வு தகவலை அடுத்து கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் உச்சக்கட்ட பாதுகாப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் தொடர்பில் கிடைத்த புலனாய்வு தகவலை அடுத்து கொழும்பின் முக்கிய இடங்கள் உச்சகட்ட பாதுகாப்பிற்குள் கொண்டு வரப்பட்டது.

கொழும்பு நகரின் பல இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை (12) பிற்பகல் முதல் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காவல்துறை, காவல்துறை விசேட அதிரடிப்படையினர், கலகம் அடக்கும் பிரிவினர் மற்றும் முப்படையினர் கொழும்பு நகரின் பல இடங்களில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, கொழும்பு கோட்டை, இலங்கை வங்கி மாவத்தை ஆகியவற்றை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கியமாக கொழும்பு பல்கலைக்கழகம், சுதந்திர சதுக்கம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள், கொள்ளுப்பட்டி சுற்றுவட்டம் போன்ற பகுதிகளில் மிக அதிகளவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் சதித்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்படுவதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல் அடிப்படையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொழும்பு நகரின் பல இடங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை  மூன்றாவது நாளாகவும் நேற்றும் முன்னெடுக்கப்பட்ட்டிருந்தது.

தற்போதைய நிலைமைய ஆய்வு செய்து பாதுகாப்பினை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.


கொழும்பில் நான்காவது நாளாக தொடரும் உச்சக்கட்ட பாதுகாப்பு - விரைவில் முக்கிய தீர்மானம் samugammedia ஆட்சி கவிழ்ப்பு சதி நடவடிக்கை தொடர்பான புலனாய்வு தகவலை அடுத்து கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் உச்சக்கட்ட பாதுகாப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் தொடர்பில் கிடைத்த புலனாய்வு தகவலை அடுத்து கொழும்பின் முக்கிய இடங்கள் உச்சகட்ட பாதுகாப்பிற்குள் கொண்டு வரப்பட்டது.கொழும்பு நகரின் பல இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை (12) பிற்பகல் முதல் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.காவல்துறை, காவல்துறை விசேட அதிரடிப்படையினர், கலகம் அடக்கும் பிரிவினர் மற்றும் முப்படையினர் கொழும்பு நகரின் பல இடங்களில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, கொழும்பு கோட்டை, இலங்கை வங்கி மாவத்தை ஆகியவற்றை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.முக்கியமாக கொழும்பு பல்கலைக்கழகம், சுதந்திர சதுக்கம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள், கொள்ளுப்பட்டி சுற்றுவட்டம் போன்ற பகுதிகளில் மிக அதிகளவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் சதித்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்படுவதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல் அடிப்படையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் கொழும்பு நகரின் பல இடங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை  மூன்றாவது நாளாகவும் நேற்றும் முன்னெடுக்கப்பட்ட்டிருந்தது.தற்போதைய நிலைமைய ஆய்வு செய்து பாதுகாப்பினை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement