• Jan 19 2025

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்!

Chithra / Oct 4th 2024, 4:17 pm
image

 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள  இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

சமூக ஊடக பதிவில் அவர் இது குறித்து தெரிவித்துள்ளதாவது,

ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவை சந்திக்க முடிந்ததை கௌரவமான விடயமாக கருதுகின்றேன்.

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்திகளை  தெரிவித்தேன்.

இந்திய இலங்கை உறவுகளிற்கான அவரது அன்பான உணர்வுகளிற்கும், வழிகாட்டுதல்களிற்கும் பாராட்டுக்கள்.

தற்போதைய ஒத்துழைப்புகளை மேலும் ஆழமாக்குவது குறித்தும் இருநாடுகளினது மக்களினதும் பிராந்தியத்தினதும் நன்மைக்காக இந்திய இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும்  ஆராய்ந்தோம் என எஸ் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். 


ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்  இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள  இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.சமூக ஊடக பதிவில் அவர் இது குறித்து தெரிவித்துள்ளதாவது,ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவை சந்திக்க முடிந்ததை கௌரவமான விடயமாக கருதுகின்றேன்.இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்திகளை  தெரிவித்தேன்.இந்திய இலங்கை உறவுகளிற்கான அவரது அன்பான உணர்வுகளிற்கும், வழிகாட்டுதல்களிற்கும் பாராட்டுக்கள்.தற்போதைய ஒத்துழைப்புகளை மேலும் ஆழமாக்குவது குறித்தும் இருநாடுகளினது மக்களினதும் பிராந்தியத்தினதும் நன்மைக்காக இந்திய இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும்  ஆராய்ந்தோம் என எஸ் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement