• Jan 25 2025

வவுனியாவில் இடம்பெற்ற தேசிய மட்ட பூப்பந்தாட்ட இறுதிபோட்டி

Thansita / Jan 21st 2025, 9:30 pm
image

தேசிய மட்ட பூப்பந்தாட்ட இறுதிப்போட்டியானது  இன்றையதினம் வவுனியா ஓமந்தை உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றிருந்தது.

 வடமாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் ஒழுங்கமைப்பில் இணைப்பாளர் தே.கமலனின் ஒழுங்கமைப்பில் கடந்த 18ம் திகதி ஆரம்பமாகிய குறித்த போட்டி 04 நாட்கள் இடம்பெற்றிருந்தது.

கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவின் கீழ் தேசிய ரீதியில் 575 ஆண், பெண் போட்டியாளர்கள் போட்டியிட்ட நிலையில் இறுதி போட்டிகள் இன்றையதினம் இடம்பெற்றிருந்தது.மேலும் இப்போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களிற்கு பிரதம விருந்தினர்களால் பதக்கம் அணிவிக்கப்பட்டதுடன், வெற்றிக்கேடயங்களும் பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் பற்றிக்நிரஞ்சன்,  இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்தின் உப தலைவர் ரொசான் குணவர்த்தன, கௌரவ விருந்தினராக விளையாட்டுத்துறை பணிப்பாளர் டி.முகுந்தன் மற்றும் விளையாட்டுத்துறை முக்கியஸ்தர்கள், போட்டி நடுவர்கள் போட்டியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் இடம்பெற்ற தேசிய மட்ட பூப்பந்தாட்ட இறுதிபோட்டி தேசிய மட்ட பூப்பந்தாட்ட இறுதிப்போட்டியானது  இன்றையதினம் வவுனியா ஓமந்தை உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றிருந்தது. வடமாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் ஒழுங்கமைப்பில் இணைப்பாளர் தே.கமலனின் ஒழுங்கமைப்பில் கடந்த 18ம் திகதி ஆரம்பமாகிய குறித்த போட்டி 04 நாட்கள் இடம்பெற்றிருந்தது.கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவின் கீழ் தேசிய ரீதியில் 575 ஆண், பெண் போட்டியாளர்கள் போட்டியிட்ட நிலையில் இறுதி போட்டிகள் இன்றையதினம் இடம்பெற்றிருந்தது.மேலும் இப்போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களிற்கு பிரதம விருந்தினர்களால் பதக்கம் அணிவிக்கப்பட்டதுடன், வெற்றிக்கேடயங்களும் பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் பற்றிக்நிரஞ்சன்,  இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்தின் உப தலைவர் ரொசான் குணவர்த்தன, கௌரவ விருந்தினராக விளையாட்டுத்துறை பணிப்பாளர் டி.முகுந்தன் மற்றும் விளையாட்டுத்துறை முக்கியஸ்தர்கள், போட்டி நடுவர்கள் போட்டியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement