• Nov 25 2024

இலங்கையில் தமிழினம் தன்னாதிக்க சுயாட்சியோடு வாழ உதவுங்கள்...! மோடியிடம் ஆறு.திருமுருகன் வேண்டுகோள்...!

Sharmi / Jun 8th 2024, 12:11 pm
image

இலங்கையில் தமிழினத்தின் பிரச்சினைகளை தீர்த்து சுதந்திரமாக தன்னாதிக்க சுயாட்சியோடு தமிழினம் வாழ்வதற்கு இந்தியா உதவ வேண்டும் என அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உபதலைவர் செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் நடந்து முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று,  மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு  வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.

பாரத தேசத்தின் முதல்வராக மீண்டும் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு அகில இலங்கை இந்துமா மன்றத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

ஆத்மீக பலத்தோடும் உயர்ந்த இலட்சியத்தோடும் இடைவிடாத முயற்சியோடும் இந்தியாவை கட்டியெழுப்பும் கட்டியெழுப்புகின்ற இந்திய பிரதமர் மீண்டும் இந்தியாவை ஆளும் பெரும் பொறுப்பை ஏற்றிருக்கின்றார்.

அதேவேளை, நரேந்திர மோடி இலங்கை தமிழர்களை நோக்கி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த போது தமிழர்களுக்கு பிரச்சினை உண்டு எனவும் அதனை நான் அறிவேன் எனவும் அப் பிரச்சினையை தீர்க்க நான் ஆவலாக உள்ளேன் எனவும் பல தடவைகள் கூறியுள்ளார்.

எனவே, இம் முறையாவது இந்தியாவின் பிரதமராக தாங்கள் மீண்டும் பதவியேற்கின்ற இந்த வேளையிலே இலங்கையில் தமிழினத்தின் பிரச்சினைகளை தீர்த்து சுமூகமாக சுதந்திரமாக தன்னாதிக்க சுயாட்சியோடு தமிழினம் வாழ்வதற்கு தாங்கள் உதவ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் தமிழினம் தன்னாதிக்க சுயாட்சியோடு வாழ உதவுங்கள். மோடியிடம் ஆறு.திருமுருகன் வேண்டுகோள். இலங்கையில் தமிழினத்தின் பிரச்சினைகளை தீர்த்து சுதந்திரமாக தன்னாதிக்க சுயாட்சியோடு தமிழினம் வாழ்வதற்கு இந்தியா உதவ வேண்டும் என அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உபதலைவர் செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்தியாவில் நடந்து முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று,  மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு  வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.பாரத தேசத்தின் முதல்வராக மீண்டும் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு அகில இலங்கை இந்துமா மன்றத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.ஆத்மீக பலத்தோடும் உயர்ந்த இலட்சியத்தோடும் இடைவிடாத முயற்சியோடும் இந்தியாவை கட்டியெழுப்பும் கட்டியெழுப்புகின்ற இந்திய பிரதமர் மீண்டும் இந்தியாவை ஆளும் பெரும் பொறுப்பை ஏற்றிருக்கின்றார்.அதேவேளை, நரேந்திர மோடி இலங்கை தமிழர்களை நோக்கி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த போது தமிழர்களுக்கு பிரச்சினை உண்டு எனவும் அதனை நான் அறிவேன் எனவும் அப் பிரச்சினையை தீர்க்க நான் ஆவலாக உள்ளேன் எனவும் பல தடவைகள் கூறியுள்ளார்.எனவே, இம் முறையாவது இந்தியாவின் பிரதமராக தாங்கள் மீண்டும் பதவியேற்கின்ற இந்த வேளையிலே இலங்கையில் தமிழினத்தின் பிரச்சினைகளை தீர்த்து சுமூகமாக சுதந்திரமாக தன்னாதிக்க சுயாட்சியோடு தமிழினம் வாழ்வதற்கு தாங்கள் உதவ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement