• May 03 2024

அக்கரைப்பற்றில் ஹெரோயின் ஆசாமி கைது!

crownson / Dec 2nd 2022, 12:46 pm
image

Advertisement

அம்பாறை நிந்தவூர் பிரதேசத்தில் இருந்து அக்கரைப்பற்றுக்கு மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் கடத்திச் சென்ற வியாபாரி ஒருவரை ஒலுவில் பகுதியில் வைத்து, நேற்று இரவு  வியாழக்கிழமை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றிரவு 7 மணியளவில் ஒலுவில் வீதியில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் நிந்தவூரில் இருந்து மோட்டார் சைக்கிளொன்றில் வந்தவரை பொலிஸார் வழிமறித்தபோது மோட்டார் சைக்கிளில் வந்தவர் பொலிஸாரை கண்டதும் வாகனத்தை வீதியில் போட்டுவிட்டு, அப்பகுதியில் உள்ள  வயலில் தப்பி ஓடியுள்ளார். 

அதனையடுத்து பொலிஸார் சுமார் 5 கிலோ மீற்றர் தூரம் வரை துரத்திச் சென்று, அவரை மடக்கிப்பிடித்து கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து ஒரு கிராம் 250 மில்லிகிராம்  ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

இதன்போது கைதுசெய்யப்பட்டவர் 22 வயதுடைய நிந்தவூரைச் சேர்ந்தவர் எனவும் அவர் நீண்ட காலமாக அக்கரைப்பற்று பிரதேசத்துக்கு போதைப்பொருளை கடத்திச் சென்று, விற்பனை செய்து வருபவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அக்கரைப்பற்றில் ஹெரோயின் ஆசாமி கைது அம்பாறை நிந்தவூர் பிரதேசத்தில் இருந்து அக்கரைப்பற்றுக்கு மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் கடத்திச் சென்ற வியாபாரி ஒருவரை ஒலுவில் பகுதியில் வைத்து, நேற்று இரவு  வியாழக்கிழமை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றிரவு 7 மணியளவில் ஒலுவில் வீதியில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில் நிந்தவூரில் இருந்து மோட்டார் சைக்கிளொன்றில் வந்தவரை பொலிஸார் வழிமறித்தபோது மோட்டார் சைக்கிளில் வந்தவர் பொலிஸாரை கண்டதும் வாகனத்தை வீதியில் போட்டுவிட்டு, அப்பகுதியில் உள்ள  வயலில் தப்பி ஓடியுள்ளார். அதனையடுத்து பொலிஸார் சுமார் 5 கிலோ மீற்றர் தூரம் வரை துரத்திச் சென்று, அவரை மடக்கிப்பிடித்து கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து ஒரு கிராம் 250 மில்லிகிராம்  ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.இதன்போது கைதுசெய்யப்பட்டவர் 22 வயதுடைய நிந்தவூரைச் சேர்ந்தவர் எனவும் அவர் நீண்ட காலமாக அக்கரைப்பற்று பிரதேசத்துக்கு போதைப்பொருளை கடத்திச் சென்று, விற்பனை செய்து வருபவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement