• May 19 2025

சீன வர்த்தக அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட குழு இலங்கைக்கு விஜயம்..!

Sharmi / May 19th 2025, 8:51 am
image

சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ தலைமையிலான உயர்மட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தவும், புதிய பொருளாதார முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயும் நோக்கிலுமே எதிர்வரும் 28 ஆம் திகதி உயர்மட்ட பிரதிநிதிகள் குழு கொழும்புக்கு விஜயம் செய்கின்றது என சீன தரப்பு தெரிவித்துள்ளது.

குறித்த சீன குழுவினர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அரசாங்கத்தின் பொருளாதார வர்த்தக துறைசார்ந்த பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை  முன்னெடுப்பார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் இலங்கை – சீன வர்த்தக மற்றும் முதலீட்டு மன்றத்தின் மாநாடு எதிர்வரும் 30 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் சீன வர்த்தக அமைச்சருடன், 77 சீன நிறுவனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் 115 வர்த்தக பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன வர்த்தக அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட குழு இலங்கைக்கு விஜயம். சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ தலைமையிலான உயர்மட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தவும், புதிய பொருளாதார முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயும் நோக்கிலுமே எதிர்வரும் 28 ஆம் திகதி உயர்மட்ட பிரதிநிதிகள் குழு கொழும்புக்கு விஜயம் செய்கின்றது என சீன தரப்பு தெரிவித்துள்ளது.குறித்த சீன குழுவினர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அரசாங்கத்தின் பொருளாதார வர்த்தக துறைசார்ந்த பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை  முன்னெடுப்பார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.அத்துடன் இலங்கை – சீன வர்த்தக மற்றும் முதலீட்டு மன்றத்தின் மாநாடு எதிர்வரும் 30 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் சீன வர்த்தக அமைச்சருடன், 77 சீன நிறுவனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் 115 வர்த்தக பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement